தமிழக பா.ஜ.க தலைவர் பேட்டியால் தூக்கம் தொலைத்த உதயநிதி.! #Dmk #TnBjp #Lmurugan #Udhayanithi

தமிழக பா.ஜ.க தலைவர் பேட்டியால் தூக்கம் தொலைத்த உதயநிதி.! #Dmk #TnBjp #Lmurugan #Udhayanithi

Update: 2020-07-01 07:55 GMT

தமிழகத்தில் பா.ஜ.க ஆளும் கட்சியும் இல்லை, எதிர்கட்சியும் இல்லை, ஆளும் அதிமுக அரசுடன் கூட்டணியில் உள்ளது. ஆனால் பா.ஜ.க கட்சியின் தலைவர்கள் கூறும் கருத்துக்கள் யாவும் தமிழக அரசியலின் மையப்புள்ளியாக சமீப காலமாக விளங்குகின்றன. அதுவும் குறிப்பாக தாங்கள்தான் தமிழக மக்களின் ஆபத்பாந்தவன், எங்களை விட்டால் தமிழகத்தை ஆள வேறு ஆள் இல்லை என்பது போன்ற மாய வலைகளை காசுக்கு ஆள் வைத்து பரப்பி வரும் திமுக தலைமை குடும்பம் பா.ஜ.க தலைவர்களின் கருத்துக்களுக்கு காலில் வெந்நீர் கொட்டியது போல் பதறுகின்றனர், அதிலும் குறிப்பாக தன்னை பட்டத்து இளவரசராக நினைத்து கொண்டு வலம் வரும் உதயிநிதி'யோ ஒருபடி மேலே போய் தூக்கம் வராமல் ட்விட்டரில் புலம்பி தள்ளுகிறார்.

தமிழக பா.ஜ.க தலைவர் திரு.L.முருகன் அவர்கள் நேற்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் "திமுக கட்சி சாத்தான்குளம் பிரச்சனையை ஊதி பெரிதாக்குகிறது, கனிமொழி அவர்கள் அவர்களின் எம்.எல்.ஏ அன்பழகன் மறைவுக்கு கூட செல்லவில்லை அதுவும் சென்னையில் நடந்த நிகழ்வு. ஆனால் அரசியல் செய்ய சாத்தான்குளம் வரைக்கும் செல்கிறார்" என அடிப்படை உண்மை கருத்தை கூறி திமுக'வின் அரசியலை அழகாக தோலுரித்து காட்டினார் தமிழக பா.ஜ.க தலைவர் திரு.L.முருகன் அவர்கள்.

இதனால் மிகவும் மனமுடைந்த உதயநிதி நேற்று இரவு 11:18 அளவில் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில்

"'ஒரு சின்ன இஷ்யூ.' ஸ்டெர்லைட்டில் 13 பேரை சுட்டுக்கொன்றாலும், சாத்தான்குளத்தில் 2 பேரை அடித்தே கொன்றாலும்... அது இவர்களுக்குச் சின்ன இஷ்யூ-தான். ஆனால், நாட்டின் மிகப்பெரிய இஷ்யூவே இவர்கள்தான் என்பதை மக்கள் அறிவர். 'தலைகீழாகத்தான் குதிப்பேன்' என்றாலும் நீங்க நோட்டாவுக்கு கீழதான்!"



என தன் உளறல் அனைத்தும் பதிவேற்றியுள்ளார். அதாவது திமுக திரு.L.முருகன் கூறிய விஷயத்தை மறுக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை மாறாக தன் மனக்குமுறலை கொட்டி தீர்க்க முடியாமல் தூக்கமின்றி தவித்துள்ளார்.

"தமிழக பா.ஜ.க திமுக'வை பிறப்பு முதல் இறப்பு வரை அரசியல் செய்ய விடுவதில்லை மாறாக அவர்களின் தவறை அவ்வபோது அழகாக சுட்டிகாட்டி வருகின்றனர். இதை திமுக'வால் ஏற்று கொள்ள இயலவில்லை தன் சொந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுவதையே ஏற்க முடியாத திமுக'வின் பட்டத்து இளவரசர் வேறு கட்சி தலைவர்கள் சொல்வதையா ஏற்று கொள்வார்? அவர்தாம் தன் அத்தை பேர் வாங்கிவிட கூடாதென்று அலறியடித்து ஓடிபோய் துக்கம் விசாரித்தவர் ஆயிற்றே!" என மூத்த அரசியல் விமர்சகர்'கள் கூறுகின்றனர்.

Similar News