ஆன்மீக பேச்சாளரை கேடயமாக்கிய தி.மு.க.! #DMK
ஆன்மீக பேச்சாளரை கேடயமாக்கிய தி.மு.க.! #DMK
ஆன்மீக பேச்சாளர் மங்கையர்கரசியின் சமீபத்திய மேடைப்பேச்சு விவாத பொருளாகியுள்ளது, அதிலும் கடவுள் மறுப்பையே குறிப்பாக இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் நோக்கமே பிரதானமாகிய திராவிட கழக சுப.வீரபாண்டியனை மேடையில் வைத்துக்கொண்டு கலைஞர்.கருணாநிதி'யின் 97வது பிறந்நநாள் வாழ்த்து என்ற பெயரில் கிட்டதட்ட திமுக'வின் கேடயமாக முழங்கியிருக்கிறார் மங்கையர்க்கரசி.
அவர் பேசியதில் இருந்து,
1) ஆன்மீக பேச்சாளர் என்ற அறிமுகம் செய்துகொண்டு கலைஞரின் புகழ் பாட ஆரமித்தது,
2) பட்டினத்தார், காரைக்கால் அம்மையார் என இந்து மத முன்னோடிகளுடன் கலைஞரை ஒப்பிட்டு பேசியது, குறிப்பாக இவர்கள் போல கலைஞர் வாழ்ந்தார் என்பது.
3) திமுக துவக்கமே கலைஞர் என்றும் அதனை உருவாக்கிய அண்ணா போன்ற தலைவர்களை மறந்து கூறியது,
4) திருக்குறளை ஒப்பீடு செய்து கலைஞரை தமிழ் பாதுகாவலர் என்றும், தமிழை கற்று தந்தவர் என்றும் பரப்புரை செய்தது,
5) ஸ்டாலின் அவர்களின் மிசா கைது பற்றிய சந்தேகங்களும், சர்ச்சைகளும் உலவி வரும் நிலையில் அவர் வீரபாண்டிய கட்டபொம்மன், பகத்சிங் போன்று சிறை வாசம் அனுபவித்தவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றது,
போன்ற மேற்கூரிய விஷயங்களை ஒரு ஆன்மீக பேச்சாளர் என்று இதுவரை அடையாளம் காணப்படவரை வைத்து பரப்புரை செய்தது விவாதம் ஆகியுள்ளது, மேலும் இதில் அப்பட்டமாக இந்து மதத்தை பற்றி அவதூறு செய்வது, பண்டிகை காலங்களில் வாழ்த்து சொல்ல கூட மனமில்லால் இருப்பது, கூட்டணி கட்சி தலைவர்கள் இந்து மதத்தை கேலி செய்வதை ஊக்குவிக்கும் விதமாக கண்டும் காணாமல் இருப்பது போன்ற விஷயங்களை இதுவரை வெளிப்படையாகவே செய்து வந்த திமுக இன்றைய காலகட்ட அரசியலில் ஆன்மீகம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது எனவும், இந்துக்கள் விழிப்புணர்வு மேலோங்கி இருக்கும் இந்த காலகட்டங்களில் சுப.வீ, வீரமணி போன்ற திராவிட பொய் பரப்புரைகள் எடுபடாமல் உப்புசப்பில்லாமல் போனதால் ஆன்மீக பேச்சாளரை அழைத்து வந்து தன் கட்சியின் அவப்பெயர்களாக எவை எல்லாம் மக்களிடத்தில் உலாவுகின்றனவோ அவை அனைத்தையும் பாரட்டுகிறேன் என்ற பெயரில் அதுவும் ஆன்மீக பேச்சாளராகிய ஒரு பெண்ணை வைத்து பரப்புரை செய்வதை எல்லாம் வைத்து பார்க்கும் போது இனி இந்து மதம் மற்றும் ஆன்மீகமே நம் எதிர்கால அரசியலை நிர்ணயிக்கும் முக்கிய காரணி என்பதை உணர்ந்து திமுக எடுத்த கேடயமாகவே தெரிகிறது என்கிறார் அரசியலில் நீண்ட அனுபவம் உள்ள ஒருவர்.