என் உடம்பில் ஓடுவது எந்த இரத்தம் தெரியுமா ?? தினகரன் பேச்சில் திகைத்துப் போன தொண்டர்கள்!!
என் உடம்பில் ஓடுவது எந்த இரத்தம் தெரியுமா ?? தினகரன் பேச்சில் திகைத்துப் போன தொண்டர்கள்!!
நெய்வேலியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “திமுக என்னும் தீய சக்தியை எதிர்த்துப் போராடும் ஒரே இயக்கம் அமமுகதான்.
“என்னைப் பார்க்கும் சிலர் நான் திமுகவுக்குச் சென்றுவிடுவேன் என்று வதந்தி பரப்புகிறார்கள். அம்மாவால் வழிகாட்டப்பட்ட என் உடம்பில் ஓடுவது திமுக எதிர்ப்பு ரத்தம். அதனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் உள்ள கட்சி அமமுக. எதற்கும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை.
“சசிகலா மூன்று ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவரை ஆளுங்கட்சியினர் யாரும் போய் பார்க்கவில்லை. இந்த ஆட்சி போனதும் பாதிப் பேர் திமுகவுக்கும் பாஜகவுக்கும் ஓடிப்போய்விடுவார்கள்.
“சசிகலாவுடன் சில அமைச்சர்கள் பேசிவருவதாகக் கூறி வருகிறார்கள். இதுபோன்று ஏதாவது பேசி உங்களைக் குழப்புகிறார்கள். எப்படி எங்களோடு அவர்கள் ஒன்றாக முடியும்.
அதிமுகவுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருபோதும் இணையாது. வருகிற தேர்தலில் அமமுக ஆட்சியைப் பிடிக்கும்,” என்றார் தினகரன்.