சேலம் உருக்காலை தொழிலாளர்களின் நலன் முற்றிலுமாக பாதுகாக்கப்படும் : வானதி சீனிவாசனிடம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி !

சேலம் உருக்காலை தொழிலாளர்களின் நலன் முற்றிலுமாக பாதுகாக்கப்படும் : வானதி சீனிவாசனிடம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி !

Update: 2019-08-21 14:35 GMT

சேலம் உருக்காலையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கார்பன்சீட் ஸ்டீல் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


இந்த உருக்காலையில் சுமார் 2000 தொழிலாளர்கள் நேரடியாக வேலை பார்த்து வருகின்றனர். 3000 பேர், மறைமுக வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்த உருக்காலை கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.


தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் சேலம் உருக்காலையை தனியார் மயம் ஆக்க மத்திய அரசு முடிவு செய்தது.


முந்தைய காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி ஆட்சியின் போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்க முடிவு செய்தது. அதனை தடுத்து நிறுத்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முயற்சிகளை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து 5 சதவீத பங்குகளை தமிழக அரசு வாங்கியது. இதன் மூலம் தனியார் நுழைவது தடுத்து நிறுத்தப்பட்டது.


இதேபோல சேலம் உருக்காலையின் பங்குகளையும் தமிழக அரசு வாங்கி சேலம் உருக்காலை தனியார் மயம் ஆவதை ஏன் தடுத்து நிறுத்த கூடாது என்ற கருத்து பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது.


இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார்.


இதையும் படிக்க : “சேலம் உருக்காலை பங்குகளை வாங்கி, தனியார் மயமாவதை தடுக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை !!


இந்த நிலையில், இன்று தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சேலம் உருக்காலை விவகாரம் தொடர்பாக இன்று மத்திய உருக்காலைத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்து பேசனேன்.



  1. உருக்காலைக்கு தேவையான மூலப்பொருளின் விலையை கணிசமாக குறைத்தது
  2. தென் இந்தியாவிலேயே மூலப் பொருட்களைப் பெற்றுக்கொள்வது


கடந்த 10 நாட்களுக்குள் எடுத்த இந்த 2 நடவடிக்கைகளால் சேலம் உருக்காலையின் நஷ்டம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.




https://twitter.com/VanathiBJP/status/1164175193146716162?s=19


தொழிலாளர் நலன் முற்றிலுமாக பாதுகாக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். மேலும், பங்கு விலக்கல் நடவடிக்கையின் முன்னேற்றத்தை பொறுத்து உருக்காலையின் நலன் மேம்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.", என்று குறிப்பிட்டுள்ளார்.


Similar News