#EIA 2020: சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு பற்றி வதந்தி பரப்பும் வீடியோக்கள் - ஒருவராவது 83 பக்க அறிக்கையை படித்திருப்பார்களா..?

#EIA 2020: சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு பற்றி வதந்தி பரப்பும் வீடியோக்கள் - ஒருவராவது 83 பக்க அறிக்கையை படித்திருப்பார்களா..?

Update: 2020-07-27 09:04 GMT

கருப்பர் கூட்டம் விவகாரத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்றே, ஒரு கட்சி சார்ந்த ஊடகங்கள் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்து வீடியோ வெளியிட்டு அதனை வைரலாக்கி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது WithdrawEIA2020 என்ற சொல். சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை என்றால் என்ன? என்பதைப்பற்றி தெரியாத யூடியூப் சேனல் நடத்துபவர்கள் கூட, எல்லாம் தெரிந்த உத்தமர்கள் போல பேசி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக அழகு குறிப்பு பற்றி வீடியோ வெளியிட்டு வந்த ஒருவர், திடீரென சூழலியல் தாக்க மதிப்பீட்டு குறித்து பேசி வைரலாகும் அளவுக்கு பின்னணி வேலை நடந்து வருகிறது.  முதலில் சூழலியல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூழலியல் தாக்க மதிப்பீடு: 

இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கவோ, இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும்.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், உங்கள் குடியிருப்பு பகுதி அருகே ஒரு ரசாயன நிறுவனத்தைக் கொண்டு வருகிறார்கள் என்று வையுங்கள். இது குறித்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும். தொழிற்சாலை அமையவுள்ள பரப்பளவு, அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளின் அளவு, அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, கழிவு மேலாண்மை திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அந்நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.

இதனை அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அவற்றிற்கு அனுமதி வழங்கும். அப்படி இல்லை எனில் மறுக்கும்.

இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன?

முன்பு சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்திற்கும், சூழலை பாதிக்காத திட்டத்திற்கும் ஒரே நடைமுறை மட்டுமே இருந்தது. உதாரணத்துக்கு விவசாய நிலத்தில், ஒரு பெரிய கிணறு தோண்ட வேண்டும் என்றால் கூட, அலைந்து திரிந்து பலகட்ட ஒப்புதல் பெற்ற பிறகே அனுமதி வாங்க முடியும். இதே நிலை எல்லா திட்டத்திற்கும் பொருந்தும் என்று இருப்பதால், ஒரு சிறு நிறுவனம் ஆரம்பிக்கக்கூட ஒரு மாதத்திற்கும் மேலே அனுமதி வேண்டி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் இந்தியாவிற்கு வரவேண்டிய பல முதலீடுகள், அண்டை நாடுகள் வசம் சென்றது.

இப்போது ஆபத்து ஏற்ப்படுத்தும் தொழில், ஆபத்து ஏற்படுத்தாத தொழில் என்று வரையறை செய்யப்பட்டு, ஆபத்து ஏற்படுத்தாத லிஸ்டில் வரும் நிறுவனங்கள், திட்டத்தை ஆரம்பித்த பிறகு ஒரு அனுமதியும், திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த பிறகு இறுதி அனுமதியும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆபத்து ஏற்ப்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு, முன்னர் இருந்ததைப்போலவே இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் அப்படியே தொடர்கின்றன.

இதனை தவறாக சித்தரிக்க முயலும் ஊடகங்கள், அனுமதியே இல்லாமல் நாசகர திட்டம் கொண்டு வரலாம், மக்கள் எதிர்த்து கேட்க கூட நாதியில்லை என்கிற மாதிரியான வதந்திகளை பரப்பி, உணர்வியல் ரீதியாக தாக்கத்தை ஏற்ப்படுத்தி வருகின்றன. சூழலியல் தாக்க மதிப்பீடு குறித்து வாய் கிழிய பேசும் பேச்சாளர்கள் எத்தனை பேர், அரசின் 83 பக்க அறிக்கையை படித்த பிறகு பேசினார்கள் என்று கேட்டுப்பாருங்கள். ஒருவரிடமும் பதில் வராது. 

எப்படி வதந்தி பரப்பப்படுகிறது, என்பதை ஆதாரத்துடன் விளக்கும் காணொளியை அடுத்து பார்க்கலாம்.

நன்றி : சாய் கணேஷ், தேசிய சிறகுகள்

Full View


Similar News