முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனோ பாதிப்பா ? #EPS #Covid19

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனோ பாதிப்பா ? #EPS #Covid19

Update: 2020-07-11 04:01 GMT

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 8-ந் தேதி மின்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கும், அவரது மகன் தரணிதர னுக்கும் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபி டிக்கப்பட்டது. அமைச்சர் பி.தங்கமணி 7-ந் தேதி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

அதற்கு முந்தைய நாள் (6-ந்தேதி) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். எனவே, அமைச்சர் பி.தங்கமணி சந்தித்தவர்கள் எல்லாம் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்ப டுத்திக் கொண்டனர். அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவரது அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் பரிசோதனை மேற் கொண்டனர்.

இந்தநிலையில், பரிசோதனை முடிவுகள் நேற்று வெளி வந்தது. அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது

Similar News