அந்தியூர் பத்ரகாளியம்மன் ஊஞ்சலில் ஆடும் ஆச்சர்யம்!

அந்தியூர் பத்ரகாளியம்மன் ஊஞ்சலில் ஆடும் ஆச்சர்யம்!

Update: 2020-08-07 03:46 GMT

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது பத்ரகாளியம்மன் கோயில். சில நாட்களுக்கு முன்பு உலகமே வியக்கும் படி அம்மன் ஊஞ்சலில் ஆடிய அதிசயம் இங்கு நடந்தது. இந்த கோயில் இருந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மேய்ச்சல் காடாக இருந்து.

இந்த பகுதியில் புல் மேய்ந்து வீடு திரும்பும் பசு ஒன்று பாலில்லாமல் தினமும் வீடு திரும்புவதை பார்த்த உரிமையாளர் அடுத்த நாள் பசுவின் பின்னால் சென்று பார்த்த போது ஒரு ஐந்து தலை நாகம் புற்றிலிருந்து வந்து பசு விடம் பால் குடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார் பிறகு அவர் கனவில் தோன்றிய காளி தான் அந்த புற்று உள்ள இடத்தில் கோயில் கொள்ள விரும்புவதாக கூறி மறைந்தார்.

இதை அடுத்து இங்கே காளி சிலை பிரதிஷ்டை செய்து கோயில் உருவாக்க பட்டது. இந்த கோயிலில் குடி கொண்டுள்ள காளி தன்னை வழிபடுபவர்களுக்கு கனவில் வந்து பலன் சொல்லுவதாக நம்பப்படுகறது . சில வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் ஒரு பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற போது பூசாரியின் கனவில் தோன்றிய காளி உடனே சென்று அந்த பெண்ணை காப்பாற்றுமாறு கூறினாள். அன்றிலிருந்து பக்தர்களின் கனவில் அடிக்கடி வந்து பலன் சொல்கிறாள்.

இன்றைக்கும் இந்த அம்பாளை மனதில் நினைத்தபடி உறங்கினால் கனவில் நம் கோரிக்கைகளுக்கு பதில் தருகிறாள் . மேலும் இந்த கோயில் தீர்த்தம் சோம்பலை போக்கி சுறுசுறுப்பை தருவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். சென்ற வருடம் கார்த்தி கை தீபத்தின் போது விளக்கு ஏற்றி வைத்து விட்டு கோயிலை பூட்டி னர் பிறகு வீட்டிற்கு செல்லும் முன் உள்ள பொருத்தப்பட்டிருந்த காமிராவை பார்த்த போது கருவறையில் வெள்ளை நிற உருவம் திரைச்சீலையின் பின் அசைவதை பார்த்தனர்.

ஏதாவது தீ பிடித்திருக்க கூடுமோ என்று எண்ணினர் பிறகு உற்றுப் பார்த்த போது ஒரு பெண் உருவம் முன் கும் பின்னுமாக ஊஞ்சலாடுவது தெரிந்து அதிர்ந்தார்கள் தொடர்ந்து இந்த காட்சியை கோயில் நிர்வாகிகள் 2 மணி நேரம் பார்த்திருக்கிறார்கள். இது சமூக வளைதளங்களில் பரவியது. காளியே இப்படி ஊஞ்சல் ஆடியதாக பக்தர்கள் பரவசமடைகிறார்கள் . இது சிறந்த ராகு தோஷ நிவர்த்தி தலமாக இருக்கிறது . செவ்வாய் வெள்ளி அன்று ராகு காலத்தில் காளி சன்னிதி முன்பு விளக்கேற்றி வழிபட்டால் திருமண தடை ராகு தோஷம் விலகுகிறது ஊஞ்சலில் ஆடிய அந்தியூர் பத்ரகாளியம்மன். 

Similar News