தண்ணீருக்கு நடுவில் இருக்கும் அதிசய விநாயகர் - பாவங்களிலிருந்து முக்தி நல்கும் புனித ஆறு.!

தண்ணீருக்கு நடுவில் இருக்கும் அதிசய விநாயகர் - பாவங்களிலிருந்து முக்தி நல்கும் புனித ஆறு.!

Update: 2020-07-11 02:04 GMT

நாடெங்கிலும் ஏன் உலகெங்கிலும் விநாயகருக்கு இருக்கும் கோவில்கள் ஏராளம். ஆனாலும் இந்த கோவில் தனித்துவம் வாய்ந்தது. காணிப்பாக்கம் விநாயகர் கோவில் என அழைக்கப்படும் இந்த இடம். ஆந்திரபிரதேசம், சித்தூர் பகுதியில் அமைந்துள்ளது. நதியின் நடுவில் அமைந்திருக்கும் இக்கோவிலின் அமைப்பு தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த உலகிற்கு சொல்லப்படாத கோவிலின் ரகசியங்கள் ஏராளம் உண்டு.

மூன்று சகோதரர்கள் முன்னொரு காலத்தில் இருந்து வந்ததாகவும் அவர்கள் முறையே, பார்க்கும், கேட்கும், வாய்பேசும் திறன் அற்றவர்களாக இருந்ததாகவும் தங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தி வந்த நீர் ஊற்றின் தண்ணிரின் அளவு குறைந்துள்ளது. அதை சீர் செய்வதற்கான முயற்சி செய்த போது, கருவி ஒன்று நீர் ஊற்றின் அடிப்பகுதியை சென்று இடித்துள்ளது. அந்த நொடியே நீர் உற்றிலிருந்த நீர் சிவப்பு நிறமாக மாறத்துவங்கியுள்ளது. மூன்று சகோதர ர்களும், கிணற்றுக்குள் யார் இருந்தார்கள் யார் மீது இந்த உபகரணம் பட்டு இப்படி நீரே இரத்தமாக கசிகிறது என்பதை அறிந்து கொள்ள தடுமாறினார்கள். அதேன் வேளையில் அந்த சிவப்பு நிற நீர் அவர்கள் மீது பட்ட போது அவர்களின் உடல் குறைபாடுகள் சரியானதையும் அவர்கள் உணர்ந்தனர். அருகில் இருந்த மக்கள் ஒன்று கூடி அதை ஆராய்ந்த போது அந்த கிணற்றிலிருந்தது ஒரு விநாயகர் சிலை என்பதை கண்டறிந்தனர். அதன் மையப்பகுதியிலேயே எழுப்பட்ட கோவில் தான் இது என்பது அந்த வட்டாரத்தில் சொல்லப்படும் கதை.

மேலும் இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழரால் கட்டப்பட்டது இது 1336 ஆண்டில் விஜயநகர பேரரசால் விரிவுப்படுத்தப்பட்டது. இதில் இருக்கும் மற்றொரு ஆச்சர்யம் இங்கிருக்க கூடிய சிலை தினசரி வளர்கிறது என்று சொல்லப்படுகிறது. பக்தர்கள் அளிக்ககூடிய உபயப் பொருட்கள் விநாயகரின் விக்ரஹத்திற்கு நாட்கள் செல்ல செல்ல சரியாக பொருந்தாமல் இருப்பதே விநாயகர் சிலை வளர்வதற்கான சான்றாக கருதுகிறார்கள்.

யாரேனும் தீமை செய்தவர்கள் இந்த கோவிலின் ஆற்றில் ஒரு முறை முங்கினாலும், அவர்கள் தாம் செய்த தவறுக்கு தாமாகவே மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது இக்கோவில் புனித நீரின் மகத்துவம் என சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி தவறிழைத்தவர்கள் முழு மனதுடன் திருந்தி மன்னிப்பு கேட்கும் வேளையில் அவர்கள் இந்த நீரில் மூழ்கி எழுந்தால் அவர்களுக்கு மன்னிப்பு கிடைப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.  

Similar News