தீபாராதணையின் போது கண்களை மூடி திறக்கும் சென்னையின் அதிசய பெருமாள் ஸ்தலம்!

தீபாராதணையின் போது கண்களை மூடி திறக்கும் சென்னையின் அதிசய பெருமாள் ஸ்தலம்!

Update: 2020-07-25 02:11 GMT

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அருகே நெற்குன்றத்தில் உள்ளது கரிவரதராஜ பெருமாள் கோயில். இந்த கோயில் பெருமாள் அற்புதங்களை செய்கிறார். அதில் சமீபத்தில் தீபாரதனை காட்டும் போது கண் திறந்து மூடுவது போல் காட்சி கொடுத்திருக்கிறார். வழக்கமாக கூட்டம் அலைமோதும் சனிக்கிழமை அன்று ஒரு நாள் தீப ஆராதனை காட்டும் போது பெருமாள் கண்களை சிமிட்டுவது போல் பக்தர் ஒருவருக்கு தோன்றியுள்ளது. அதை மற்றவர்களிடம் சொன்ன போது யாரும் நம்பவில்லை. பிறகு அடுத்த சனிக்கிழமையும் இதே போல் கண் சிமிட்டுவதை அந்த பக்தரோடு சிலரும் பார்த்திருக்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரியாமல் சிலருக்கு மட்டுமே தெரிகிறதாம்.

தற்போது இந்த கோயிலில் தீபாரதனை காட்டும் போது கருவறை விளக்குகளை அனைத்து விடுகிறார்கள் பிறகு தீபாராதனையின் போது கண்கள் இமை திறந்து மூடுவது போன்ற காட்சியால் பக்தர்கள் மெய் சிலிர்கிறார்கள். இந்த பெருமாள் 27 நட்சத்திரங்களின் அதிபதி அதனால் பக்தர்கள் 27 ரூபாயை பெருமாள் காலடியில் வைத்து தொடர்ந்து 9 நாட்கள் அதிக பட்சமாக 9 வாரங்கள் வழிபட்டு வந்தால் வேண்டியது அப்படியே நிறைவேறுகிறது. தொடர்ந்து 27 மாதங்கள் ஜன்ம நட்சத்திரத்தில் இங்கு வழிபட்டால் தீராத தோஷங்கள் தீருகின்றன.

இங்குள்ள சந்தான கோபால கிருஷ்ணனும். சத்ய நாராயணனாக வீற்றிருக்கும் பெருமாளும் குழந்தை வரம் அருளுகிறார்கள். குழந்தை பேறு இல்லாதவர் சத்ய நாராயணா பூஜை நடத்துவது வழக்கம். இந்த பெருமாள் கோயிலில் ஒவ்வொறு பெளர்ணமி அன்றும் இந்த பூஜை நடை பெருகிறது. இங்குள்ள வராஹ ஆஞ்சநேயர் அதிசயமாக கோயில் அருகிலேயே கண்டெடுக்க பட்டவர் இந்த கோயில் 400 ஆண்டுகள் பழமையானது . ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் காலை 11 மணிக்கு கூட்டு பிராத்தனை நடைபெறுகிறது. தங்கள் கஷ்டங்களை எழுதி கொடுத்தால் அதை பெருமாள் பாதத்தில் வைத்து சகஸ்ர நாம பாராயாணம் செய்து வழிபடுகிறார்கள்.

இங்கு வரும் பக்தர் கள் எவ்வளவு பெரிய பாவத்தை செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து அருள வேண்டும் என தனி சந்நிதியில் அமர்ந்துள்ள பெருந்தேவி தாயார் வரம் பெற்றிருக்கிறார். அதனால் இந்த பெருமாள் அபய ஹஸ்த்த முத்திரையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 

Similar News