தினமும் இரவு கிருஷ்ணன் உணவு அருந்தும் ஆச்சர்யம் - ரங் மஹால் திருத்தலம்.!

தினமும் இரவு கிருஷ்ணன் உணவு அருந்தும் ஆச்சர்யம் - ரங் மஹால் திருத்தலம்.!

Update: 2020-06-30 01:17 GMT

கிருஷ்ணனும் ராதையும் இரவில் வந்து உணவு உண்ணும் அதிசய கோயில் உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது . கிருஷ்ணன் சிறு பிள்ளையாக மாடுகள் மேய்த்து கொண்டும் சிறுவர்களுடன் விளையாடியும் திரிந்த பகுதியாக இன்றைய உத்திர பிரதேசத்தில் உள்ள பிருந்தாவனம் என்று பகுதி உள்ளது .

இந்த பகுதியில் உள்ள நந்திவனம் என்ற சிறிய காட்டுபகுதியில் உள்ள கோயிலில்தான் இந்த அதிசயம் நடக்கிறது . யமுனா நதிக்கரையில் உள்ள மதுரா மாவட்டமே கண்ணன் பிறந்த ஊராகும் . பிருந்தாவனம் இந்த பகுதிக்கு உட்பட்ட இடமாகும் . இந்த பகுதி முழுவதுமே கண்ணன் நடமாடிய இடங்களே . இந்த பகுதியில் கண்ணணுக்கு ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன . அதில் ஒரு அமானுஷ்ய கோயில்தான் பிருந்தாவனத்தில் உள்ள நந்திவனம் காட்டில் இருக்கும் ரங் மஹால் .

இங்கு கண்ணன் தினமும் தனது அதிசயத்தை நிகழ்த்துகிறார் . வறட்சியான இந்த காட்டு பகுதியில் மரங்கள் எப்போதும் பச்சை பசேலென காட்சி தருகிறது . இங்குள்ள மரம் அனைத்தும் நேரே வளராமல் வளைந்தே வளருகிறது . கண்ணனுக்கும் ராதைக்கும் தரும் மரியாதையாக இதை மக்கள் கருதுகிறார்கள் . இங்கு ஏராளமான துளசிச் செடிகள் வளர்ந்திருக்கின்றன இவை அனைத்தும் கிருஷ்ணன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த கோபியர்கள் என்று கூறுகிறார்கள் .

இந்த கோயிலில் சந்தனத்தில் செய்த கட்டிலும் அருகில் குவளையில் நீரும் , பல் துளக்க வேப்பங்குச்சியையும் இரவு தரிப்பதற்கு வெற்றிலை பாக்கும் வைத்து பூஜித்து விட்டு கோயிலை முடி விடுகிறார்கள் . இரவு 7 மணிக்கெல்லாம் எல்லோரும் வெளியேறிவிடுகிறார்கள். அதன் பிறகு இரவு யாரும் இங்கு வருவதில்லை, பகல் வேளையில் இந்த பகுதியில் காணப்படும் விலங்குகளும் பறவைகளும் கூட இரவு வெளியேறி விடுகிறது . அடுத்த நாள் காலையில் கோயில் திறக்கபடும் போது கட்டில் மேல் இருக்கும் பட்டுத் துணி கலைந்து உணவும் நீரும் தீர்ந்து போயிருக்கும் இந்த அதிசயம் தினமும் நடைபெருகிறது. இரவில் கிருஷ்ணரும் ராதையும் கோயிலுக்கு வருவதாகவும் அங்குள்ள துளசி செடி யெல்லாம் கோபியர்களாக மாறி கிருஷ்ணர் ராதையுடன் நடனமாடுவதாகவும் நம்புகிறார்கள் . இந்த காட்சியை காண யாராவது முயற்சித்தால் அவர்கள் சித்தம் கலங்கி அல்லது குருடாகி விடுவதாகவும் மக்கள் நம்புகிறார்கள் . கிருஷ்ணர் தினமும் வரும் இக்கோயிலை தரிசிக்க ஆயிரகணக்கானோர் உலகம் முழுதிலும் இருந்து வருகிறார்கள். 

Similar News