பக்தரின் கனவில் வந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தும் வட சென்னை சாய்பாபா.!
பக்தரின் கனவில் வந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தும் வட சென்னை சாய்பாபா.!
அதிசயங்கள் நிகழ்த்தும் வட சென்னை பாபா ஆலயம் .
வட சென்னையில் வண்ணாரப்பேட்டையில் காமராஜர் சாலையில் உள்ள குடியிருப்பொன்றில் அமைந்துள்ளது வட சென்னை ஷீரடி சாய்பாபா கோயில் . தமிழகத்திலேயே ஷீரடிக்கு நிகரான அற்புதத்தை கொண்டது இந்த ஆலயம் . இந்த ஆலயத்தில் அமைந்துள்ள பாபாவின் சிலையில் உள்ள கண்கள் மிக தத்ரூபமாக நம்மை பார்த்து உருட்டி விழிப்பது போல் இருக்கும் . நிஜமாகவே பாபா நம்மை பார்பது போன்ற அனுபவத்தை இந்த ஆலயத்தில் உள்ள பாபா நமக்கு தருகிறார் .
தினமும் இந்த ஆலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த அனுபவத்தை பெற்று மெய் சிலிர்க்கிறார்கள் . நாம் பக்கவாட்டில் சென் று நின்றாலும் கரு விழிகளை உருட்டி நம்மை பார்பது போலிருக்கிறது. ஆனால் இந்த சிலையை உருவாக்கிய போது இது போல் பிரத்தியேகமாக ஏதும் உருவாக்க பட வில்லை. ஆரம்பத்தில் இயல்பாக இருந்த இந்த சிலையின் கண்கள் தற்போது பிரகாசமாக உயிரோட்டமாக இருப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள் . இதனால் அந்த ஆலயத்திற்கு மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பகுதியில் குடியிருந்த பக்தர் ஒருவரின் கனவில் பாபா தோன்றி தன்னை அருகில் உள்ள இடத்தில் வைத்து வழிபட சொன்னதால் அங்கு சிறிதாக ஓர் ஓலை குடிசையில் சாய் பாபா சிலையை வைத்து வழிபட்டு வந்தார். பிறகு நாளாக ஆக மக்கள் கூட்டம் அதிகமானதால் அங்கு ஒரு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இப்போது அழகான கோயிலாக உருவாக்கபட்டுள்ளது. இங்கு ஐயப்பன் சன்னிதி தட்ஷணா மூர்த்தி சன்னிதி மற்றும் கிருஷ்ணர் சன்னதி இருப்பது சிறப்பு . ஷீரடியில் உள்ளது போலவே சமாதி மந்திர் குருஸ்தான் துவாரகா மாயி சாவடி என்று அமைக்க பட்டிருக்கின்றன .