சுனாமியால் கூட அசைக்க முடியாத துறவிகள் உருவாக்கிய ஆலயம் - திருச்செந்தூர்!

சுனாமியால் கூட அசைக்க முடியாத துறவிகள் உருவாக்கிய ஆலயம் - திருச்செந்தூர்!

Update: 2020-07-04 02:15 GMT

துறவிகள் ஐவர் இணைந்து புணரமைத்து கட்டிய கோயில் இன்று வரை எந்த இயற்கை சீற்றத்திற்கும் பாதிக்கப்படாமல் இருந்து வருகிறது . கடற்கரைக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள இந்த கோயில் திருச் சீரலைவாய் , ஜெயந்திபுரம் , சதுர்வேதி மங்கலம் திருச்செந்தூர் என்று பல பெயர்களால் அழைக்க படுகிறது . கடலுக்கு அருகில் கட்டப்பட்ட இந்த கட்டிட அமைப்பும் நிச்சயம் சேதமுறும் ஆனால் 300 ஆண்டுகளாக மண் அரிப்போ கடற் சீற்றமோ ஏன் சுனாமியால் கூட பாதிக்கபடாமல் இருக்கிறது.

இது போன்ற பெரிய கோயில்களை ஜமீன்தார்கள் அல்லது மன்னர்களாலேயே கட்ட இயலும் ஆனால் இந்த பிரம்மாண்ட கோயிலை திருச்செந்தூரில் வாழ்ந்த மவுனசாமி, ஆறுமுகசாமி , காசி சாமி , வள்ளிநாயகசாமி , மற்றும் தேசிக மூர்த்தி சாமி ஆகிய வருமானம் ஏதுமற்ற துறவிகள் கட்டியுள்ளனர் . இது கடற்கரையிலிருத்து 67 மீ தூரம் தான் உள்ளது . மேலும் இதன் கருவறை கடல் மட்டத்திலிருந்து 10 அடி தாள்வாக உள்ளது. ஆனால் இந்த கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை . மண் அரிப்பு எதுவும் இல்லை . இது எங்குமே இல்லாத அதிசயம்.

இந்த கோயிலில் பாலசுப்ரமணிய சுவாமி என்றும் சண்முகர் என்றும் 2 மூலவர்கள் உள்ளனர். இந்த தலம் ஒரு குரு பரிகார தலமாகும் . முருகன் இத்தலத்தில் ஞான குருவாக வீற்றிருக்கிறான். சூரனை வதம் செய்ய வியாழ முனிவர் முறுகனுக்கு உபதேசித்து அருளியதால் அவரும் இத்தலத்திலேயே வீற்றிருக்கிறார். பெளர்ணமி அன்று ஓர் இரவு முழுவதும் இங்கு தங்கி இருந்து அடுத்த நாள் நாழிக்கிணற்றிலும் பிறகு கடலிலும் குளித்து வழிபட்டால் வாழ்வில் வரும் காரணம் புரியாத பிரச்சனைகள் நீங்கும். பண நெருக்கடி உள்ளவர்களுக்கு இந்த கோயில் ஒரு சிறந்த பரிகார தலமாகும்

இக்கோயில் திருப்பணி செய்தவர்களில் ஒருவரான தேசிக மூர்த்தி சுவாமிகள் கனவில் வந்த முருகன் தனக்கு ராஜ கோபுரம் கட்ட ஆணையிட்டான். ஆனால் தன்னிடம் எந்த பணமும் இல்லாததால் முருகனின் கட்டளையை ஏற்று வேலையாட்களுக்கு பணத்திற்கு பதில் விபூதி பொட்டலம் கொடுத்து வேலை வாங்கினார் . வேலையாட்கள் வேலை முடிந்து பொட்டலத்தை திறந்து பார்த்த போது அது பணமாக மாறியிருந்த அதிசயமும் நிகழ்ந்தது .

இந்த கோயில் 9 நிலைகளுடன் 137 அடி உயரத்தில் 9 செப்பு கலசங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

Similar News