தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்கச் செய்யும் அதிசயம் வாய்ந்த கோவில்.!
தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்கச் செய்யும் அதிசயம் வாய்ந்த கோவில்.!
கேரளாவின் காசர்கோடு கும்பாலாவில் அமைந்துள்ள அனந்தபுரம் ஏரி கோவிலுக்கு அந்த ஏரியில் உள்ள முதலை காவலாக உள்ளது . திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் போலவே அமைப்பு கொண்ட இக் கோயில் கேரளாவில் ஏரியின் நடுவில் இருக்கும் ஒரே கோயிலாகும் . இந்த கோயில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அனந்த பத்ம சுவாமி மூலவராக உள்ளார்.
மரத்தால் கட்டப்பட்ட இந்த கோயில் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது . இந்த கோயிலில் உள்ள அனந்தபத்ம சுவாமியை வழிபட்டால் தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைப்தாகவும் இழந்த பதவி மீண்டும் கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள் . பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வில்வ மங்கலம் சுவாமிகள் எனும் முனிவர் இந்த இடம் அருகில் ஆசிரமம் அமைத்து விஷ்ணுவிற்கு பூஜைகள் செய்து கொண்டிருந்தார் .
அடிக்கடி அங்கு ஒரு சிறுவன் வந்து விளையாடுவதை பார்த்த அவர் அந்த சிறுவனை அழைத்து விசாரித்தார் அந்த சிறுவன் ஒரு அனாதை என்று அறிந்து தன்னோடு அவனை வைத்து கொண்டார் . அந்த சிறுவன் ஒரு முறை பூஜைக்கு வைத்திருந்த பாலை குடித்து விட்டதால் அவனை முனிவர் கோபத்தில் அங்கிருந்து செல்ல அவனை பின் தொடர்ந்து சென்ற முனிவருக்கு அவன் தற்போது கோயில் உள்ள இடத்தில் காட்சி தந்து மறைந்தான் . அந்த சிறுவன் விஷ்ணு தான் என்று உணர்ந்த அவர் . அங்கேயே குடி கொள்ளுமாறு வேண்டினார்.
அதற்கிணங்கிய விஷ்ணு அங்கே கோயில் கொண்டதாக தல வரலாறு கூறுகிறது . இங்குள்ள குகை ஒன்றிற்கு வில்வ மங்கலம் குகை என்றே பெயர் உள்ளது . ஏரி குழ்ந்த இந்த கோயிலை கோவில் உருவான காலம் முதலே முதலை ஒன்று பாதுகாக்கிறது . ஒன்று இறந்து விட்டால் மற்றொன்று அதன் இடத்திற்கு வந்து விடுகிறது . ஆனால் எப்போதும் ஏரியில் ஒரே ஒரு முதலை தான் இருக்கும் . ஒன்றுக்கும் மேற்பட்ட முதலைகளை இதுவரை யாருமே பார்த்ததில்லையாம் .
இந்த முதலைக்கு பபியா என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள் . இந்த முதலை மிகவும் சாதுவாக யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் இருக்கிறது . ஏரியில் உள்ள மீன்களை கூட இது சாப்பிடுவதில்லை மாறாக உச்சிகால பூஜையின் போது வழங்கபடும் வெல்லம் கலந்த சாதத்தை மட்டுமே உண்கிறது . இதற்கு முசலி நெய்வேத்யம் என்று கூறுகிறார்கள் . ஒரு நாளைக்கு இரண்டு முறை முதலைக்கு உணவு வழங்க படுகிறது பக்தர்களும் தங்கள் கையால் உணவை உணவளிக்க லாம் . கேரள மாநிலம் கண்ணரில் இருந்து இந்த கோயில் அமைந்துள்ள கும்பாலn விற்கு நிறைய பேருந்துகள் உள்ளன .