ஆப்கானிஸ்தானில் இருந்து முதல் கட்டமாக 11 சீக்கியர்கள் இந்தியா வருகை - மதரீதியில் தாக்கப்பட்டதால் இந்தியாவில் தஞ்சம்.!

இந்தியாவிற்கு வரும் ஒடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் சிறுபான்மையினரின் முதல் குழு இதுவாகும்.

Update: 2020-07-26 15:01 GMT

ஆப்கானிஸ்தானில் இருந்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த 11 பேர், காபூலில் உள்ள இந்திய தூதரகம் மூலம் குறுகிய கால விசா வழங்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) புதுடெல்லிக்கு வந்ததாக தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. வருகை தரும் 11 பேரில், கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் பக்தியா மாகாணத்தில் ஒரு குருத்வாராவிலிருந்து கடத்தப்பட்ட நிடன் சிங் சச்ச்தேவாவும் அடங்குவார்.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் 700 சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு, நீண்ட கால விசாவுக்கு ஒப்புதல் அளித்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் அறிவித்த பின்னர், இந்தியாவிற்கு வரும் ஒடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் சிறுபான்மையினரின் முதல் குழு இதுவாகும். மார்ச் 25 அன்று காபூலின் மையப்பகுதியில் உள்ள ஒரு குருத்வாராவின் மீது நடந்த பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் 600 சீக்கியர்கள் இந்தியாவுக்கு நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பித்திருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட சீக்கிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பலரும் தற்போது காபூல் குருத்வாராவில் தஞ்சம் கோருகின்றனர். ஜூன் மாதம் குருத்வாராவுக்குச் சென்று சேவா செய்யச் சென்ற நிடன் சிங் சச்தேவா கடத்தப்பட்ட பின்னரும், சீக்கிய சமூகத்தின் மீதான தாக்குதல் தொடர்கிறது. கடத்தப்பட்ட அவர், ஆப்கானிஸ்தான் படைகளால், ஹக்கானி நெட்ஒர்க்கிலிருந்து மீட்கப்பட்டார்.

Cover Image Courtesy: Tribune India

Similar News