Be in present என்கிறார்களே, ஆன்மீகம் சொல்வதை போல் நிகழ்காலத்தில் மட்டும் இருப்பது எப்படி?

Be in present என்கிறார்களே, ஆன்மீகம் சொல்வதை போல் நிகழ்காலத்தில் மட்டும் இருப்பது எப்படி?

Update: 2020-08-03 02:16 GMT

நிகழ்காலத்தில் மட்டுமே இருத்தல் என்பது நம் ஆன்மீக மரபின் ஆணிவேர். ஆனால் நிகழ்காலத்தில் இருப்பதன் சிக்கலே, ஒரு வேளையை செய்கிற போது ஒருவருக்கு அவருடைய கடந்த காலத்தில் நடந்த துக்கம், துயரம், கசப்பான நினைவுகள் நியாபகத்தில் வந்து நம் நிகழ்கால அனுபவத்தை பாழக்கும். நிகழ்காலத்தில் எப்படி இருக்கலாம் என்பதை ஜென் தத்துவம் ஒரு கதையின் மூலம் விளக்குகிறது…

ஒரு தன் ஜென் குரு தன் சீடர்கள் ஐவர் அவரவர் மிதிவண்டிகளில் வருவதை கண்டார். மிதிவண்டியில் இருந்து சீடர்கள் இறங்கியதும் அவர்களை நெருங்கி பேசத்துவங்கினார்.

முதல் சீடரிடம்," நீ எதற்காக மிதிவண்டி ஓட்டுகிறாய்" என கேட்டார்.

அதற்கு அந்த சீடர்... "நான் மிதிவண்டி ஓட்டுகிற போது பொருட்களை நான் சுமக்க தேவையில்லை. பாரம் குறைகிறது" என்றார்.

அதற்கு குரு, "அற்புதம் நீ புத்திசாலி, பிற்காலத்தில் என்னை போல் கூனனாக நீ ஆக மாட்டாய்"என கூறி இரண்டாம் சீடரிடம் அதே கேள்வியை கேட்டார் அதற்கு அவர் "நான் மிதிவண்டியை ஓட்டும் பொழுது என்னை கடக்கிற இயற்கை காட்சிகளை ரசிக்கிறேன் " என்றார்.

அதற்கு குரு " உன் கண்கள் உலகை நோக்கி எப்போதும் திறந்தேயிருக்கிறதே...மிக அற்புதம்" என் கூறி மூன்றாம் சீடரிடமும் அதே கேள்வியை கேட்டார்... அதற்கு அவர் "நான் மிதிவண்டியில் வரும் பொழுது, மந்திரங்களை சொல்லி கொண்டே வர முடிகிறது" என்றார். அதற்கு குரு "பலே..உன் மனம் எப்போதும் ஆன்மீகத்தில் லயித்திருப்பதால் நீ உண்மையின் பக்கத்தில் இருப்பாய்" என கூறி நான்காம் சீடரிடம் காரணம் கேட்டார்.... அதற்கு அந்த சீடர் "நான் மிதிவண்டியில் வருகிற பொழுது... என்னை சூழ்ந்திருக்கும் அனைத்து சூழல்கள், உயிரினங்கள் என அனைத்துடனும் ஆனந்தத்தில் திளைக்கிறேன்" என்றார். அதற்கு குரு "பிரமாதம்... நீ மற்ற உயிர்களுக்கு தீங்கிழைக்காத தங்க பாதையில் பயணிக்கிறாய்" என கூறி ஐந்தாம் சீடரிடம் காரணம் கேட்ட போது அவர் சொன்னார்...."நான் மிதிவண்டியில், மிதிவண்டியை ஓட்டுவதற்காக மட்டுமே பயணிக்கிறேன்" என்று.

அதற்கு குரு "இன்று முதல் நான் உன் சீடன்" என்றார். 

Similar News