இனி உலகின் தலைசிறந்த கல்விநிறுவனங்களுடன் இந்திய மாணவர்கள் போட்டியிட முடியும்: புதிய கல்விக் கொள்கைக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு!

இனி உலகின் தலைசிறந்த கல்விநிறுவனங்களுடன் இந்திய மாணவர்கள் போட்டியிட முடியும்: புதிய கல்விக் கொள்கைக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு!

Update: 2020-07-30 09:10 GMT

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள "தேசிய கல்விக்கொள்கை 2020"இந்திய மாணவர்களை உலகின் அரங்கில் சிறந்தவற்றுடன் போட்டியிடுவதற்கு தயார்படுத்தும் என்று முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகழ்ந்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவிதுள்ள அவர்,

"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய கேபினெட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தேசியக் கல்விக் கொள்கையை நான் மனதார வரவேற்கிறேன்.

இந்தச் சீர்த்திருத்தம் கல்வித்துறையை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்லும். தரமான கல்வி முறையின் மூலம், இந்திய மாணவர்கள், உலகம் முழுதும் சிறந்த மாணவர்களுடன் வழிவகுக்கும்.

இந்தக் கல்விக் கொள்கையானது ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது நிச்சயமாக வரவேற்கத்தகுந்தது.

இதன் மூலம் குழந்தைகள் மத்தியில் விமர்சனச் சிந்தனை வளரும். இலக்கியத் திறன்களும் அதிகரிக்கும் என்பதால், கல்வியில் சிறப்பாகவும் செயல் பட முடியும்" என்று பாராட்டியுள்ளார்.

Similar News