இஸ்லாமுக்கு மதம் மாறிய இந்தியப்பெண், தீவிரவாதத் தொடர்புகளுக்காக பங்களாதேஷில் கைது.! #India #Bangladesh #JMB
இஸ்லாமுக்கு மதம் மாறிய இந்தியப்பெண், தீவிரவாதத் தொடர்புகளுக்காக பங்களாதேஷில் கைது.! #India #Bangladesh #JMB
ஜமாஅத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷின் (JMB) உறுப்பினராக இருந்த குற்றத்திற்காக 25 வயது பெண்ணை, பங்களாதேஷின் டாக்கா காவல்துறையின் பயங்கரவாத மற்றும் நாடுகடந்த குற்றப் (CTTC) பிரிவு, வெள்ளிக்கிழமையன்று கைது செய்தது. விசாரணையின் போது, அந்தத் பெண்ணின் பெயர் ஆயிஷா ஜன்னத் மொஹான் என்பதும் ,அவர் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறினார் என்பதும் தெரிய வந்துள்ளது.
அந்தப் பெண்ணின் உண்மையான பெயர், பிரக்யா டெப்நாத், அவர் கொல்கத்தாவை ஒட்டியுள்ள ஹூக்லி மாவட்டத்தின் தனியாகாலி காவல் நிலையத்தின் கீழ் வரும் பாசிம் கேஷாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். உயர் நிலைப் பள்ளியில் அவர் படிக்கும் போது, அவருக்கு ஒரு முஸ்லீம் பெண் தோழி இருந்துள்ளார். அவரின் மூலமாக 2009ல் இஸலாமிற்கு ரகசியமாக மதம் மாறினார் பிரக்யா.
ரகசியமாக, ஒரு முஸ்லீம் பெயரை ஏற்றுக்கொண்டார் (ஆயிஷா ஜன்னத் மொஹான்). மேலும் அவரது சொந்த மாவட்டத்திலுள்ள சலாபி மதகுருக்களால் இஸ்லாமில் தீவிரமயமாக்கப்பட்டார்.சில வருடங்களுக்கு முன்பு, JMB தீவிரவாத இயக்கத்தின் பெண்கள் பிரிவில் சேர்ந்தார். அந்தப் பிரிவின் தலைவர் அஸ்மானி கட்டூன் அல்லது 'போண்டி ஜிபோன்' அவரை ஆட்சேர்ப்பு செய்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஆயிஷாவின் பணி, இந்துப் பெண்களை இஸ்லாமுக்கு மதம் மாற்றி சலாபி மத குருக்களுடன் அறிமுகப்படுத்தி, JMBயில் இணைப்பதாகும். இந்தத் தீவிரவாத அமைப்பு வங்காளத்தில் பரவி உள்ளது.
தி டெய்லி ஸ்டார் செய்திகளில், CTTC உதவி கமிஷனர் இம்ரான் ஹொசைன் கூற்றுப்படி, ஆயிஷா ஒரு போலி பங்களாதேஷ் பிறப்புச் சான்றிதழையும், அதன் மூலம் பங்களாதேஷ் தேசிய அடையாள அட்டையையும் பெற்றார். இந்த போலி ஆவணங்கள் தவிர, ஒரு இந்திய பாஸ்போர்ட் அவர் வசம் இருந்து மீட்கப்பட்டது. ஆயிஷாவிற்கு நிதி சேர்க்கும் வேலையும் தரப்பட்டது. சமீபத்தில் பங்களாதேஷ் குடிமகனான அமீர் ஹொசைன் சதாமை தொலைபேசி வாயிலாகத் திருமணம் செய்து கொண்டார். (கணவர் ஓமனில் வசிக்கிறார்). அவருடைய அறிவுறுத்தலின் பேரில், ஆயிஷா பங்களாதேஷில் கடந்த ஆகஸ்டில் இருந்து வசித்து வருகிறார்.