உலகில் 184 நாடுகள் ஆதரவுடன் கனடாவை பின்னுக்கு தள்ளி வெற்றி கண்ட இந்தியா - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்று சாதனை!

உலகில் 184 நாடுகள் ஆதரவுடன் கனடாவை பின்னுக்கு தள்ளி வெற்றி கண்ட இந்தியா - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்று சாதனை!

Update: 2020-06-18 09:08 GMT

ஐ.நா. பாதுகாப்பு குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினராக 1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992 மற்றும் 2011-2012 ஆம் ஆண்டுகளிலும், தற்போது 2021-2022 ஆம் ஆண்டுக்கு என இந்தியா 8-ஆவது முறையாக நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 2 ஆண்டுகளுக்கு இந்தியா ஐ.நா பாதுகாப்பு சபையில் நிறந்தரமற்ற உறுப்பினராக இருக்கும்.

ஆசிய -பசிபிக் பிராந்தியம் சார்பில் இந்தியா போட்டியிட்டது. 192 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை 128 ஆகும். இதில் 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாகவும், 113 நாடுகள் கென்யாவுக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன. கனடா தோல்வியடைந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படுவது பாதுகாப்பு சபை. இது 5 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களைக் கொண்டது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளது. இவை தவிர நிரந்தரமற்ற உறுப்பினர்களாக 10 நாடுகள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொதுச் சபை இரண்டு நிரந்தரமற்ற ஐந்து உறுப்பினர்களை இரண்டு ஆண்டு காலத்திற்கு சுழற்சி முறையில் தேர்வு செய்கிறது.

Similar News