இந்தியாவில் முதலீடு செய்ய துடியாய் துடிக்கும் சீனா - 50 முதலீட்டு திட்டங்களை "அப்புறம் பாக்கலாம்" என்று இந்தியா கொடுத்த கூலான பதிலடி!

இந்தியாவில் முதலீடு செய்ய துடியாய் துடிக்கும் சீனா - 50 முதலீட்டு திட்டங்களை "அப்புறம் பாக்கலாம்" என்று இந்தியா கொடுத்த கூலான பதிலடி!

Update: 2020-07-07 07:29 GMT

இந்திய அரசின் புதிய வர்த்தக கொள்கையின் கீழ் சீன நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சுமார் 50 முதலீட்டு திட்டங்களை இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.

ஏப்ரல் மாதத்தில் இந்தியா அறிவித்த புதிய விதிகளின் கீழ், அண்டை நாடுகளை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களின் அனைத்து முதலீடுகளும் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய முதலீட்டு விதிகள் கொரோனா வைரஸ் பரவலின் போது, இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துதல்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

எவ்வாறாயினும், இந்தியா -சீனா மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதில் ஏற்பட்ட மோதலில் இருந்து, இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகள் மோசமடைந்துள்ளது. ஏற்கனவே உள்ள விதிகள் படி ஒப்பந்தங்கள் பரிசீலனை செய்ய தாமதமாகும்.

எல்லையில் உண்டான மோதலை தொடர்ந்து இப்போதைக்கு ஒப்புதல்களை அனுமதிக்கப்போவதில்லை என்று இந்திய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இனிமேல், சீன நிறுவனங்கள் இந்திய அரசின் ஒப்புதலை தாண்டி மட்டுமே, இந்த நிறுவனங்கள் மீது கை வைக்க முடியும்.

Similar News