ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 700 சீக்கியர்கள் இந்தியாவில் விரைவில் தஞ்சம்.!

சீக்கிய குடும்பங்களின் முதல் குழு டெல்லியில் உள்ள ஒரு குருத்வாராவில் தற்போது வசித்து வருகின்றனர்.

Update: 2020-08-02 11:19 GMT

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையின ஹிந்துக்களும் சீக்கியர்களும் இதர பிற வகுப்பினர்களும் கொடுமைப்படுத்தப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும், கட்டாய மதமாற்ற சிக்கல்களும், பெண்கள், சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்டு இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதும் வழக்கமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் தோன்றிய மதங்களை பின்பற்றும் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் புத்தமதத்தை பின்பற்றுவதால் மதக்கொடுமைக்கு ஆளாகி வரும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை கொடுத்து அடைக்கலம் தரும் விதமாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடந்த டிசம்பரில் மத்திய அரசு கொண்டு வந்தது.

அங்கே இவர்களை இன்னல் படுத்தும் பெரும்பான்மையான முஸ்லிம் சமூகத்திற்கும் இதே முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று இங்கு இடதுசாரி கட்சிகளும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் போராடி வருகின்றன. இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆப்கானிஸ்தானில் பல கொடுமைகளுக்கு உள்ளாகும் சீக்கிய மற்றும் இந்துக் குடும்பங்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து, தங்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் 11 சீக்கியர்கள் கொண்ட முதல் குழு வந்து சேர்ந்தது. அந்த முதல் குழு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களால் விமானநிலையத்தில் அன்புடன் வரவேற்கப்பட்டது. இப்போது ஆப்கானிஸ்தானில் மிச்சமிருக்கும் 700 சீக்கியர்களையும் இந்தியாவிற்கு கொண்டு வர இந்திய அரசு தயாராக இருக்கிறது.

சீக்கிய குடும்பங்களின் முதல் குழு டெல்லியில் உள்ள ஒரு குருத்வாராவில் தற்போது வசித்து வருகின்றனர். டெல்லி சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டி அவர்கள் தங்கும் ஏற்பாடுகளை கவனித்து வருகிறது.

பா.ஜ.க தேசிய செயலாளர் சர்தார் சிங் கூறுகையில், "முதல் குழு வந்து அடைந்ததற்கு பிறகு இன்னும் 700 சீக்கியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறது அவர்களை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வரும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். அவர்களின் உறவினர்கள் பெரும்பாலும் திலக் நகரில் வசிக்கின்றனர். எனவே அவர்கள் தங்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது." என்றார்.

சர்தார் சிங் மேலும் கூறுகையில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த தைரியமான முடிவு காரணமாகவே ஆப்கானிஸ்தானில் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் சீக்கிய மற்றும் ஹிந்து சகோதரர்களை இந்தியாவிற்கு கொண்டு வர முடிந்தது என்றார். குடியுரிமை திருத்த சட்டம் மட்டும் இல்லையென்றால் அண்டைய நாடுகளில் மத ரீதியாக தொல்லைக்கு உள்ளாகும் சிறுபான்மையினர் இந்தியாவில் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு இருந்திருக்காது என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பல சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் காபூலில் உள்ள குருத்வாராவில் தங்கள் பாதுகாப்பிற்கு பயந்து தஞ்சம் அடைந்து உள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் குருத்வாராவிற்கு சேவை செய்ய சென்று கொண்டிருந்த ஒரு சீக்கிய நபரை ஹக்க்த்தானி தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட சீக்கியர் பின்னர் ஆப்கானிய படைகளால் விடுவிக்கப்பட்டார். இதன் பிறகு சீக்கிய சமூகத்தின் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது.

இப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சீக்கியர்களும், இந்துக்களும் அங்கே பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்கள் தான். அவர்களுடைய பல உறவினர்கள் ஏற்கனவே இந்தியாவில் குடிபெயர்ந்து உள்ளனர்.

Similar News