சர்வதேச கடல் வர்த்தக கேந்திரமாக மாறிய இந்தியா- 4000 கோடியில் பிரதமர் மோடி தலைமையில் கொச்சியில் புதிய திட்டங்கள் தொடக்கம்!

சர்வதேச கடல் வர்த்தக கேந்திரமாக இந்தியா மாறி உள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Update: 2024-01-18 08:30 GMT

கேரளா மாநிலம் கொச்சியில் கடற்படை தளத்தில் ரூபாய் 4000 கோடி மதிப்பில் சர்வதேச கப்பல் மராமத்து முனையம், உலர் கப்பல் நிறுத்தகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் எல்.பி.ஜி ஏற்றுமதி, இறக்குமதி முனையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட தொடக்க விழா கொச்சி கடற்கரை தளத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் தலைமை தாங்கினார். விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள துறைமுகங்களில் கப்பல்கள் பலமணி நேரம் காத்திருந்து சரக்குகளை ஏற்றி இறக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது உலகில் பெரிய நாடுகளுக்கு ஈடு கொடுத்து இந்திய துறைமுகங்களில் வெகு நேரம் காத்திருக்காமல் சரக்குகள் ஏற்றி இறக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இந்தியா சர்வதேச வர்த்தக மையமாக மாறும்போது கடல் வழியான வர்த்தகம் சிறப்பாக நடைபெற சக்தி வாய்ந்த துறைமுகங்கள் அவசியம். அதனை தற்போது வடிவமைத்து கொண்டிருக்கிறோம்.


இந்தியாவிலேயே மிகப்பெரிய உலக கப்பல் நிறுத்தகம் கொச்சியில் செயல்பட உள்ளது. இது கொச்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும். இது தவிர நவீன ஏற்றுமதி இறக்குமதி மையம் சர்வதேச கப்பல் மராமத்து மையம் அமைக்கப்பட்டு நவீன துறைமுகங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொச்சி கடற்படையின் பலம் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த அனைத்து வசதிகளும் கேரளாவில் அமைய உறுதுணையாக இருந்த கேரள மக்களை நான் பாராட்டுகிறேன்.


தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஆசாத் காலில் திட்டத்தின் கீழ் இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக்குவதற்கு ஒவ்வொரு மாநிலமும் அதன் பங்களிப்பை அளிக்க வேண்டும்.அந்த வகையில் கேரள மாநிலத்தின் பங்களிப்பாக இந்த புதிய வளர்ச்சி திட்டங்கள் அமையும். கேரளாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News