உலக அளவில் அதிக மக்கள் விரும்பும் இந்தியர், பிரதமர் நரேந்திர மோடி!உலகளவில் 6-வது இடம் பிடித்தார்!!

உலக அளவில் அதிக மக்கள் விரும்பும் இந்தியர், பிரதமர் நரேந்திர மோடி!உலகளவில் 6-வது இடம் பிடித்தார்!!

Update: 2019-07-20 11:57 GMT

இங்கிலாந்தை சேர்ந்த யூ கோவ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், உலக அளவில் அதிக மக்களால் விரும்பப்படும் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். அதேபோல உலக அளவில் 6 - வது இடத்தை மோடி பெற்றுள்ளார்.


இந்த பட்டியலில் முதல் 2 இடங்களை, மைக்ரோசாப் அதிபர் பில்கேட்ஸ், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆகியோர் பிடித்துள்ளனர்.





இந்த பட்டியலில் இந்தியவைச் சேர்ந்த வேறு எந்த அரசியல் தலைவரின் பெயரும் இடம்பெறவில்லை. அதுமட்டுமல்ல இந்திய  தொழில் அதிபர்களின் பெயரும்கூட இடம்பெற வில்லை.


ஆனால் இந்த பட்டியலில் முதல் இருபது இடங்களில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


இந்திய கிரிக்கெட் விரர்களில் ஒருவர் கூட இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.


அதிக மக்களால் விரும்பப்படும் பெண்கள் பட்டியலில் பெண்களுக்கான பட்டியலில் உலக அளவில் ஒபாமாவின் மனைவி மிச்சேலி முதலிடம் பிடித்துள்ளார்.  இந்தி நடிகை தீபிகா படுகோன், 13 - வது இடத்தையும், பிரியங்கா சோப்ரா 15 - வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய், சுஸ்மிதா சென் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.




https://youtu.be/C0gENB1fT68

Similar News