தூத்துக்குடி மாவட்ட இஸ்ரோ கண்காட்சி முன்னேற்பாடுகளை இரகசியமாக படம் பிடித்த ரபீக், ஜாபர் அலி - அதிரடியாக களமிறங்கியது உளவுத்துறை.!

தூத்துக்குடி மாவட்ட இஸ்ரோ கண்காட்சி முன்னேற்பாடுகளை இரகசியமாக படம் பிடித்த ரபீக், ஜாபர் அலி - அதிரடியாக களமிறங்கியது உளவுத்துறை.!

Update: 2019-09-30 09:29 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த வாரம் இஸ்ரோ சார்பில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த முன்னேற்பாடுகளை சந்தேகப்படும் வகையில் படம் பிடித்த ரபீக், ஜாபர் அலி ஆகிய இருவரை உளவுத்துறை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரித்து வருகிறது.


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணத்தில் ஆந்திராவில் உள்ளதை போலவே ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. ஆந்திராவில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தை விட, குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகைக்கு 8 டிகிரி அருகில் உள்ளதால், இன்னும் குறைந்த செலவில் செயற்கைகோள்களை விண்ணில் ஏவ முடியும்.


இதற்காக அப்பகுதி மக்களிடத்தில் இஸ்ரோ குறித்த விழிப்புணர்வு ஏற்பட அடுத்த வாரம், VOC பூங்காவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதன் முன்னேற்பாடுகளை இரு வாலிபர்கள் சந்தேகப்படும் வகையில் படம் பிடித்துள்ளனர். அவர்களை பிடித்து விசாரித்த பொழுது, அவர்களின் பெயர் ரபீக், ஜாபர் அலி என்பது தெரிய வந்துள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் வெளிநாட்டில் இருந்து இருவரும் வந்துள்ளனர். இன்னும் துருவி விசாரிக்கப்பட்டதில் அவர்களிடமிருந்து ஏராளமான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


அடுத்த வாரம் நடைபெறும் இஸ்ரோ கண்காட்சியில் ஏராளமான விண்வெளி ஆய்வாளர்கள் கலந்து கொள்ள இருந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நாசவேலை அரங்கேற வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்த நிலையில், காவல்துறையினர் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளனர்.


Similar News