கொரானா வைரஸ் போர்: புதிய இஸ்ரேலியத் தொழில்நுட்பங்கள் இந்தியாவுடன் பகிரப்படுமென இஸ்ரேல் அறிவிப்பு! #Israel-India

கொரானா வைரஸ் போர்: புதிய இஸ்ரேலியத் தொழில்நுட்பங்கள் இந்தியாவுடன் பகிரப்படுமென இஸ்ரேல் அறிவிப்பு! #Israel-India

Update: 2020-07-24 06:48 GMT

கோவிட் -19 கொரானா வைரஸ் தொற்றுப் பரவலை எதிர்த்துப் போரிடுவதற்கு இந்தியாவும் இஸ்ரேலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒத்துழைப்பை அறிவித்துள்ளன. இதன் மூலம், புதிதாகக் கண்டறியும் தன் இஸ்ரேலியத் தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும்.

தொடர்ச்சியான ட்வீட்களில், இந்தியாவில் உள்ள இஸ்ரேலின் தூதரகம், வரும் வாரங்களில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகியவை இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் முன் எப்போதுமில்லாத வகையில் கோவிட் -19 எதிர்ப்பு ஒத்துழைப்பை வழிநடத்தும் என்று கூறியது. 



டெல் அவிவிலிருந்து (இஸ்ரேல் தலைநகரம்) புது டெல்லிக்கு ஒரு சிறப்பு விமானம் இதில் அடங்கும், இது இஸ்ரேல் நன்கொடையாக வழங்கியது. கோவிட்-19 ஐ எதிர்ப்பதற்கான இஸ்ரேலின் புதிய தொழில்நுட்பங்களை இது கொண்டு வரும்.

இஸ்ரேலிய R&D ஆராய்ச்சியாளர்கள் குழு புதுடெல்லிக்கு வந்து சேரும், அவர்கள் DRDO விஞ்ஞானிகளுடன் இணைந்து விரைவான கோவிட் -19 பரிசோதனைக் கருவியை உருவாக்கி வருகிறார்கள், இது 30 வினாடிகளில் முடிவைத் தரும்.

கோவிட் -19 பரவலின் ஆரம்ப கட்டங்களில் மருந்து, முககவசங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை, இஸ்ரேலுக்கு இந்தியா அனுப்பி வைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இஸ்ரேல் இயந்திர வென்டிலேட்டர்களையும் அனுப்பி வைக்கும்.

Cover Image Courtesy: The Hindu

Similar News