ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பகுதிகளாகக் காட்டிய பாகிஸ்தான் அரசுத் தொலைக்காட்சி - உண்மையைக் கூறியதால் கடுப்பாகிய பாகிஸ்தானியர்கள்.! #JammuKashmir #PTV

ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பகுதிகளாகக் காட்டிய பாகிஸ்தான் அரசுத் தொலைக்காட்சி - உண்மையைக் கூறியதால் கடுப்பாகிய பாகிஸ்தானியர்கள்.! #JammuKashmir #PTV

Update: 2020-06-09 01:56 GMT

பாகிஸ்தானின் அரசுத் தொலைக்காட்சியான PTV சமீபத்தில், ஜம்மு-காஷ்மீர் பகுதிகள் இந்தியாவில் இருக்கும் வரைபடத்தை ஒரு குழந்தைகள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பினர். பாகிஸ்தானியர்கள் சமூக வலைத்தளங்களில் இதற்கு கொந்தளித்து வருகிறார்கள். 


மக்கள் அடர்த்தி மற்றும் பரவல் குறித்து விவாதித்த அந்த நிகழ்ச்சியில் தெரியாமல் உண்மையான வரைபடத்தை வெளியிட்டு விட்டனர்.  


இதற்கு கடும் எதிர்ப்பு வந்த பிறகு, இது மனித 'தவறு' எனவும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாக்கிஸ்தான் தொலைக்காட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



உண்மையில் கில்கிட் மற்றும் பால்டிஸ்தான் பகுதிகள் உட்பட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் முழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் முழுமையான பகுதிகளாகும். இதை இந்தியா பல முறை தெளிவாக நிரூபித்துள்ளது

PTV சர்ச்சைக்குள்ளாவது இது முதல் முறையல்ல. முன்னொரு தடவை, பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவுக்கு சென்றிருந்தார். அவர் பேச்சின் போது செய்தியில் பெய்ஜிங் (Beijing) என்று எழுதுவதற்கு பதிலாக அவர் begging (பிச்சை எடுக்க) சென்றிருப்பதாக கூறி வம்பில் மாட்டிக் கொண்டது. (இம்ரான் கான் உண்மையில் கடன் பெறவே சீனா சென்றிருந்தார்  என்பது வேறு விஷயம்)

Similar News