இந்திய-சீன மோதல் பதற்றம்: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு.! #Japan #IndiaChinaStandOff

இந்திய-சீன மோதல் பதற்றம்: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு.! #Japan #IndiaChinaStandOff

Update: 2020-07-03 10:39 GMT

இந்தியாவுக்கான ஜப்பானிய தூதர் சடோஷி சுசுகி வெள்ளிக்கிழமை (ஜூலை 3), உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் (LAC) நீடித்து வரும் இந்திய-சீனமோதல் பதற்ற விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தார்.

தூதர் சுசுகி ஒரு ட்வீட்டில் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு விளக்கமளித்ததாகவும், இந்த விவகாரத்தில் அமைதியான தீர்வைத் தொடர இந்திய அரசாங்கத்தின் கொள்கையை ஆதரித்ததாகவும் கூறினார். 



தூதர் சுசுகி மேலும் கூறுகையில், "எல்லைக் கோட்டில் இப்போதிருக்கும் நிலையை மாற்றுவதற்கான ஒருதலைப்பட்ச முயற்சிகளை ஜப்பான் எதிர்க்கிறது". என்றார்.

இந்த மோதல் உண்டானதற்குக் காரணமே எல்லைக் கோட்டில் இப்போதிருக்கும் நிலையை மாற்றுவதற்கான ஒருதலைப்பட்ச முயற்சிகளை சீனா மேற்கொள்வது தான் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கால்வான் மோதலுக்குப் பிறகு கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜூன் 27ல் இந்திய கடற்படை, ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் பயிற்சி கப்பல்களுடன் சேர்ந்து இந்தியப் பெருங்கடலில் ஒரு பயிற்சியை நடத்தியது.

முன்னதாக, கால்வான் மோதலின் போது வீர மரணமடைந்த 20 இந்திய வீரர்கள் குறித்து தூதர் சுசுகி தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.

2017 ஆம் ஆண்டில் சீனாவுடனான டோக்லாம் மோதலின் போது இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்த முதல் நாடு ஜப்பான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Similar News