இன்று உலக இரத்த தான தினம் - தன்னார்வத்துடன் இரத்த தானம் கொடுப்பவர்களைக் கொண்டாடும் தினம்.! #June14 #WorldBloodDonorDay #GiveBloodGiveLife
இன்று உலக இரத்த தான தினம் - தன்னார்வத்துடன் இரத்த தானம் கொடுப்பவர்களைக் கொண்டாடும் தினம்.! #June14 #WorldBloodDonorDay #GiveBloodGiveLife
வருடா வருடம் ஜூன் 14 அன்று WHO மற்றும் அனைத்து நாடுகளும் உலக இரத்த தான தினத்தை கொண்டாடுகின்றன.
பாதுகாப்பான இரத்தம் உலகம் முழுக்கத் தேவைப்படுகிறது. சிகிச்சைகள் மற்றும் அவசர தலையீடுகளுக்கு பாதுகாப்பான இரத்தம் முக்கியமானது. உயிருக்கு ஆபத்தான வியாதிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நீண்ட காலத்திற்கு உயர்தர வாழ்க்கையுடன் வாழவும் சிக்கலான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் வெற்றிகரமாக நடக்கவும் இது உதவும். அனைத்து வகையான (இயற்கை பேரழிவுகள், விபத்துக்கள், ஆயுத மோதல்கள் போன்றவை) அவசரகாலங்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் இரத்தம் மிக முக்கியமானது, மேலும் தாய் மற்றும் குழந்தை பிறந்த பராமரிப்பில் இன்றியமையாத, உயிர் காக்கும் பங்கைக் கொண்டுள்ளது.
ஆனால் பாதுகாப்பான இரத்தம் கிடைப்பது ஏழை நாடுகளில் இன்னும் குதிரைக் கொம்பாக உள்ளது. நன்கொடைகள் குறைவாகவும், இரத்தத்தை பரிசோதிப்பதற்கான உபகரணங்கள் பற்றாக்குறையாகவும் இருப்பதால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் பாதுகாப்பான இரத்தம் அனைவருக்கும் கிடைக்க செய்ய போராடுகின்றன. உலகளவில், 42% இரத்தம் அதிக வருவாய் உள்ள நாடுகளில் சேகரிக்கப்படுகிறது, அவை உலக மக்கள் தொகையில் 16% மட்டுமே உள்ளன.
உலகின் மிகப்பெரிய இரத்த பற்றாக்குறையை இந்தியா அனுபவிக்கிறது. தேவைப்படும் அளவை விட நம் நாடு ஆண்டுக்கு 41 மில்லியன் யூனிட் ரத்தம் குறைவாகப் பெறுவதாக லான்செட் குறிப்பிடுகிறது.மக்கள் இரத்த தானம் செய்வது அவர்களை பலவீனப்படுத்தக்கூடும் என்று நினைக்கிறார்கள். உண்மையில், இரத்த தானம் செய்வது உடலுக்கு பல்வேறு வழிகளில் பயனளிக்கும்.
தன்னார்வமாக இரத்த தானம் செய்பவர்கள் மூலம் மட்டுமே பாதுகாப்பான இரத்தத்தை போதுமான அளவில் பெற முடியும். இதனால்தான் 2005 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கும், இலவசமாக இரத்தத்தை கொடுக்க அதிகமான மக்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறப்பு நாளை நியமித்தது. உலக இரத்த தானம் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று நடைபெறுகிறது. இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், பாதுகாப்பான இரத்தத்திற்கான உலகளாவிய தேவை குறித்தும், அனைவரும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள் இது.