கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் - உச்சகட்ட கலக்கத்தில் தி.மு.க, பேரதிர்ச்சியில் உறைந்த திராவிடர் கழகம்.! #Karupparkootam #DMK #DK

கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் - உச்சகட்ட கலக்கத்தில் தி.மு.க, பேரதிர்ச்சியில் உறைந்த திராவிடர் கழகம்.! #Karupparkootam #DMK #DK

Update: 2020-07-27 10:10 GMT

கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர், கள்ளச்சாராயம், போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில், நில அபகரிப்பு, மணல் கடத்தல், திருட்டு வீடியோ உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது இந்த சட்டம் பாய்ச்சப்படுகிறது. தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை இந்த சட்டத்தின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய காவல் துறைக்கு இந்த சட்டம் இடமளிக்கிறது.

இதனால் தி.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் மிகுந்த கலக்கத்திற்க்கு ஆளாகியுள்ளன. மேலும் குண்டாஸ் சட்டத்தின் பிடியில் இருக்கும் சுரேந்திரனுக்கு காவல் துறையின் விசாரணை வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாலேயே இந்த சட்டத்தின் அடிப்படையில் இவர் அடைக்கப்பட்டதாகவும், மேலும் சில அரசியல் முக்கிய புள்ளிகளும் இதன் விசாரணை வளையத்திறக்குள் வர உள்ளதாகவும் தெரிகிறது. கறுப்பர் கூட்ட யூ ட்யூப் சேனலில் உள்ள 500 வீடியோக்கள் பொதுமக்களின் பார்வையில் இருந்து தடை செய்ய பட்டாலும் அவை அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் மற்றும் திராவிட பேச்சாளர்களாகிய கீ.வீரமணி, சுப.வீரபாண்டியன், சுந்தரவள்ளி, கொளத்தூர் மணி போன்றோர்களும் விரைவில் இந்த விசாரணை வளையத்தில் வர வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் தி.மு.க'வின் ஐடி விங்க மற்றும் தி.மு.க ஆதரவு ஐடி'க்களின் சப்போர்ட் கறுப்பர் கூட்டத்திற்க்கு இருப்பதால் இதன் விசாரணை வளையம் தி.மு.க'வில் நீண்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

மேலும், எங்கே தி.மு.க தொடர்பு கறுப்பர் கூட்டத்திற்கு இருப்பது தெரிந்தால், ஏற்கனவே இந்துக்கள் எதிரி என்கிற சுயரூபம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதோ அது இன்னும் அதிகமாகி 2021 தேர்தலில் தி.மு.க இந்துக்கள் வாக்கு வங்கியை இழந்து கடந்த 10 ஆண்டுகளில் 2 சட்டமன்ற தேர்தல்களில் மண்ணை கவ்வியதோ அதுபோலவே இந்த தேர்தலிலும் ஆகிவிடுமோ என தி.மு.க தலைமை அஞ்சி வேறு எதாவது பிரச்சினை கிளப்பி இதை திசை மாற்ற முயற்சிப்பதாக தகவல்.

Similar News