கிறிஸ்தவ காப்பகத்தில் பாலியல் குற்றம் ! குழந்தைகள் நலக் குழு உறுப்பினரே துணை போனதால் அதிர்ச்சி !

சென்னை குழந்தைகள் நல குழு உறுப்பினர் பதவியில் இருக்கும் இசபெல் மற்றும் அவருடைய தம்பி பென்னட் ஆகியோர் மீது பெரவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2021-08-14 00:15 GMT

சென்னையில் கிறிஸ்தவகுழு நடத்திவரும் காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இசபெல் என்பவரின் தம்பியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னையில் Madras Christian Council Of Social Service என்ற அமைப்பு காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறது. அந்த காப்பகத்தில் சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என 130 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாக செயலாளராக 56 வயதுடைய இசபெல் ரிச்சர்ட்சன் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் சென்னை மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு கால கட்டத்தின் போது இசபெல் தனது தம்பியான பென்னட் ரிச்சர்ட்சன் என்பவரை அந்த விடுதியில் தங்க அனுமதித்துள்ளார். காப்பகத்தில் தங்கிய அந்த காமக்கொடூரன் அங்கிருந்த 15 வயது சிறுமி மற்றும் 20 வயது பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமி காப்பக பொறுப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் விசாரித்தபோது பென்னட் பாலியல் தொல்லை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இசபெல் நிர்வாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் சென்னை குழந்தைகள் நல குழு உறுப்பினர் பதவியில் இருக்கும் இசபெல் மற்றும் அவருடைய தம்பி பென்னட் ஆகியோர் மீது பெரவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இசபெல்லை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் காமக்கொடூரன் பென்னட்டை தேடி வருகின்றனர். குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பதவியில் இருக்கும் ஒருவரின் தம்பியே குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Madras Christian Council Of Social Service அமைப்பு ஒரு FCRA NGO. அதாவது பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் அமைப்பு. இசபெல்லா இந்த அமைப்பின் தலைமை செயற்பாட்டாளர் என்ற பொறுப்பு வகிக்கிறார். இந்த அமைப்பின் வருடாந்திர நிதி அறிக்கையில் அவ்வாறு கையெழுத்திட்டுள்ளார்.













இந்த அமைப்பு முழுக்க முழுக்க ஒரு கிறிஸ்தவ அமைப்பு. இதன் செயற்குழுவில் 13 சர்ச்சுகள் மற்றும் நான்கு கிறிஸ்தவ அமைப்புகளில் இருந்து பரிந்துரைக்கபட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுள் கத்தோலிக்க திருச்சபைகளில் உயர்பதவிகளில் இருக்கும் பாதிரியார்களும் அடக்கம். இந்த அமைப்பு தமிழக சமூக நலத்துறை மற்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தங்களிடமிருந்து அரசு நிதி உதவி பெற்றுள்ளது.

ஏற்கனவே தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் இவ்வாறு மதம் சார்ந்து இயங்கும் NGOக்கள் குழந்தைகளை மதம் மாற்றுவது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் இப்படிப்பட்ட அமைப்புகளின் மூலம் நடத்தப்படும் காப்பகங்களில் தொடர்ந்து இத்தகைய பாலியல் குற்றங்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு குற்றம் உழைப்பவர்களுக்கு உதவும் வகையில் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் சமூக நலத்துறையிலும் மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்புடைய அரசு துறைகளிலும் அதிக அளவில் பணி புரிகின்றனர். இதற்கு இசபெல்லா ரிச்சர்ட்சன் ஒரு‌ மிகச் சிறந்த சான்று.

(With inputs from : @by2kaafi)

Tags:    

Similar News