எவையெல்லாம் முக்கியமான பொருட்கள், துறைகள்? சுயசார்பு நிலையை எட்ட அசோசெம் அமைப்பின் பரிந்துரைகள்.! #MakeInIndia #AtmaNirbarBharat #SelfReliance #Manufacturing
எவையெல்லாம் முக்கியமான பொருட்கள், துறைகள்? சுயசார்பு நிலையை எட்ட அசோசெம் அமைப்பின் பரிந்துரைகள்.! #MakeInIndia #AtmaNirbarBharat #SelfReliance #Manufacturing
பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்பு பாரதத்தை நிறுவுவதற்கான அழைப்பை அடுத்து முன்னெப்போதையும் விட இப்போது இந்தியாவில் படைப்பாற்றலை ஊக்குவித்து உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் ஆர்வம் அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது. இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தொழில் துறை அமைப்பான அசோசெம் அடுத்த 2,3 ஆண்டுகளில் அதிகபட்ச சுய சார்பு நிலையை அடைய உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டிய 15 முக்கியமான இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தெரிவு செய்துள்ளது.
சமீபத்திய தரவுகளை ஆய்வு செய்தபோது கச்சா எண்ணெய் தவிர்த்து மின்னணு பொருட்கள்தான் தான் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது என்று அசோசெம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் கூட இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
'தொழிற்சாலைகள் எப்போதும் போல் இயங்கும் நிலையில் இந்த பொருட்கள் ஒரு மாதத்திற்கு 5 பில்லியன் டாலர் என்ற அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை பெருமளவில் பாதிக்கிறது. எனவே இதை குறைப்பது அவசியம்' என்று அசோசெமின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அசோசெமின் பொதுச் செயலாளர் தீபக் சூட் கூறுகையில், "கச்சா எண்ணெயை நம்பி இருப்பதை குறைக்க நீண்டகால திட்டமிடல் தேவைப்படும் நிலையில் குறைந்தபட்சம் மிக முக்கியமான 15 துறைகளில் நாம் சுயசார்பு நிலையை அடைவது மிக முக்கியம். உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக அதிகம் முதலீடு செய்வதோடு வாடிக்கையாளர்கள் இருப்பதிலேயே தரமான பொருட்களை சர்வதேச அளவில் கிடைக்கும் மலிவான விலைக்கு வாங்க கூடிய நிலையையும் ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.