ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் - சிறப்பு அந்தஸ்து நீக்கத்தின் முதல் ஆண்டு நாளில் அதிரடி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் - சிறப்பு அந்தஸ்து நீக்கத்தின் முதல் ஆண்டு நாளில் அதிரடி!;
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மூ செயல்பட்டு வந்தார். இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையின் அறிக்கையின் படி, முர்மூ பதவி விலகி விட்டதாகவும், புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோஜ் சின்ஹா மோடியின் முன்னாள் அமைச்சரவை சகா ஆவார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட முதலாம் ஆண்டு நாளில் புதிய துணை நிலை ஆளுநர் காஷ்மீருக்கு நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.