"வீரர்களின் தியாகம் வீணாகாது, தூண்டப்பட்டால் இந்தியா சரியான பதிலடி கொடுக்கும் - பிரதமர் மோடி உறுதி.! #Modi #IndiaChinaStandoff

"வீரர்களின் தியாகம் வீணாகாது, தூண்டப்பட்டால் இந்தியா சரியான பதிலடி கொடுக்கும் - பிரதமர் மோடி உறுதி.! #Modi #IndiaChinaStandoff

Update: 2020-06-17 11:21 GMT

சீனப் படையினருடன் லடாக் மோதலில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, நமது வீரர்களின் தியாகம் வீணாகாது என்று கூறினார். இந்தியா அமைதியை விரும்புகிறது, ஆனால் தூண்டப்பட்டால், இந்தியா சரியான பதிலடி கொடுக்கும் என்றார். 



"நம் வீரர்களின் தியாகம் வீணாகாது என்று நான் நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நம்மைப் பொறுத்தவரை, இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக முக்கியமானது, அதைப் பாதுகாப்பதை யாரும் தடுக்க முடியாது. இந்தியா அமைதியை விரும்புகிறது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. ஆனால், தூண்டப்பட்டால், இந்தியா எந்த வகையிலும் பொருத்தமான பதிலடி அளிக்க தயாராக உள்ளது, "என்று பிரதமர் மோடி கூறினார். உயிரை இழந்த துணிச்சலான வீரர்கள் குறித்து, பிரதமர் மோடி, எதிரிகளைக் கொல்லும் போது அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நாடு பெருமிதம் கொள்ளும் என்றார்.

ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே ஒரு வன்முறை மோதல் நடந்தது, இது இரு தரப்பிலும் உயிரிழப்புக்கு வழிவகுத்தது. இந்தியா 20 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ள நிலையில், சீன அதிகாரிகள் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களை வழங்கவில்லை. இருப்பினும், சீனப் படையினரின் இறப்பு 40 க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Similar News