"கற்றது கைமண்ணளவு... கல்லாதது உலகளவு" – ஔவையார் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி!

"கற்றது கைமண்ணளவு... கல்லாதது உலகளவு" – ஔவையார் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி!

Update: 2020-02-24 07:07 GMT

தமிழகத்தில் தமிழை விற்று பிழைப்பு நடத்தியவர்கள், நடத்தி வருகின்றவர்களும் அதிகம். அதுபோல தமிழனை பகடைக்காய்களாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி வருபவர்கள் ஏராளம்.

ஆனால் ஒரு பிரதமர் தொடர்ந்து தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் பற்றுக் கொண்டு செயல்படுகிறார் என்றால், அது பிரதமர் நரேந்திர மோடியாகத்தான் இருக்க முடியும்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பை பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் நிகழ்த்தினார். அப்போது தமிழர்களின் கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் வேட்டி, சட்டை, துண்டு சகிதமாக பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்றார்.

அதுபோல ஐநா சபைக்கு சபையில் உரையாற்றிய போது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று பாடல் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக "மனதின் குரல்" நிகழ்ச்சியில் நேற்று (23-ஆம் தேதி) பேசிய பிரதமர் நரேந்திரமோடி "கற்றது கைமண்ணளவு... கல்லாதது உலகளவு" என்ற பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

தமிழ் பெண் புலவரான ஔவையார், "கற்றது கை மண்ணளவு... கல்லாதது உலகளவு" என்று பாடியுள்ளார். நாம் பல விஷயங்களை கற்று அறிந்து இருக்கலாம். அதற்காக நமக்கு எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் கொள்ளக்கூடாது. நமக்குத் தெரியாத, நாம் அறிந்திராத பல விஷயங்கள் உள்ளன. மணலை அள்ளினால் நமது கைப்பிடியில் எவ்வளவு மணல் இருக்குமோ அந்த அளவுக்குத்தான் நாம் கற்றுள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதைத்தான் அவ்வையார் அந்தப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

Similar News