மூகாம்பிகை கோவில் ஸ்தல வரலாறு !
கொல்லூர் மூகாம்பிகை கோவில் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கொல்லூரில் அமைந்துள்ளது.
கொல்லூர் மூகாம்பிகை கோவில் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கொல்லூரில் அமைந்துள்ளது. இது அன்னை மூகாம்பிகைக்கு அர்பணிக்கப்பட்ட கோவிலாகும். செளபர்ணிகா நதிக்கு தென்புறக்கரையில் அமைந்துள்ளது இந்த கோவில். இந்த இடம் கோகர்ணா மற்றும் கன்யாகுமரிக்கு இடையே அமைந்துள்ளது. இந்த இடம் முனிவர் பரசுராமரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது .
இங்கு அருள் பாலிக்கும் மூகாம்பிகை ஆதிபராசக்தியின் ஆம்சம். இங்கிருக்கும் அன்னை அரக்கன் காமசூரனை வதைக்க இந்த அவதாரம் எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன. மூன்று லோகங்களுக்கும் அதிபதியாக எண்ணிய காமசூரன், பிரம்மனை நோக்கி தவமியற்றி அரிய வரத்தை பெற்றான். அவனுடைய அட்டுழியங்களை பொருக்க முடியாத தேவர்கள் மும்மூர்த்திகளிடம் வழிபட்டனர். அந்த மும்மூர்த்திகளும் முப்பெருதேவியரிடம் சென்று, மூன்று பெரும் ஒரே சொரூபமாக உருவெடுத்து அந்த அரக்கனை அழிக்க வேண்டும் என வேண்டினர்.
அதனை அடுத்து மூன்று தேவியரும் ஒன்றே இணைந்து எடுத்த அவதாரமே மூகாம்பிகை என்பது நம்பிக்கை. இந்த கோவில் குறித்து சொல்லப்படும் மற்றொரு கதை யாதெனில், ஆதி சங்க்ராச்சார்யர் தேவி வழிபாட்டில் மூழ்கியிருந்து அவருடைய தரிசனத்தை பெற்றார். அப்போது தேவியிடம், கேரளா பகுதியில் வந்து அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அந்த வேண்டுகோளை ஏற்ற அன்னை, ஒரு விதிமுறை விதித்தார். அதாவது ஆதி சங்கராச்சார்யர் முன்னே நடக்க வேண்டும், அன்னை பின்னே நடந்து வருவார். இடம் வந்து சேரும் வரை, ஆதி சங்கரர் திரும்பி பார்க்க கூடாது. ஒருவேளை திரும்பினால் அதே இடத்தில் சிலையாகி அருல் வழங்குவார். இந்த விதிமுறைக்கு ஒப்பு கொண்ட ஆதி சங்கரர் முன்னே நடக்க, பின்னே அன்னையின் கால் சலங்கையொலி தொடர்ந்து கேட்டு வந்தது.. ஆதி சங்கரருடன் திருவிளையாடல் நிகழ்த்திய அன்னை. சலங்கையொலியை நிறுத்தினார். இதனால் கலக்கமுற்ற ஆதி சங்கரர் விதிமுறையை மறந்து திரும்பி பார்த்த இடம் கொல்லூர். அன்னை தன்னை அங்கேயே நிறுவுமாறு கேட்டுகொண்டு, ஆதி சங்கரரின் வேண்டுகோளை ஏற்று கேரளாவில் சோட்டானிக்கரையில் பகவதிஅம்மனாக தோன்றுவதாக வாக்களித்தார் என்பது நம்பிக்கை.
மூகாம்பிகையின் கோவில் கொல்லூரிலும், ஆதி சங்கரர் தீவிர தவம் இயற்றி அன்னையின் தரிசனம் பெற்ற இடம் கொடசாத்ரி மலை என்றும் கருதப்படுகிறது. இந்த மலை கொல்லூரிலிருந்து 21 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
Image Source : Official Moohambigai website, Pinterest