நாகூரில் மறைந்துள்ள சித்தர் பீடத்தை மீட்டெடுத்த தன்னார்வலர்கள்.! #Nagoore #Nagapptinum #Spirituality

நாகூரில் மறைந்துள்ள சித்தர் பீடத்தை மீட்டெடுத்த தன்னார்வலர்கள்.! #Nagoore #Nagapptinum #Spirituality

Update: 2020-07-13 07:11 GMT

சிவ ரகசியத்தை அறிந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே. இப்பூவுலகில் மனித பிறிவிகளாக பிறப்பெடுத்து சிவ சிந்தனையில் ஈடுபாடு கொண்டு, சிவ ரகசியத்தியத்தை தெரிந்து கொண்டு மனித பிறவியை சிவ ரகசியத்தின் மூலம் வென்றெடுத்து பல அதியசய செயல்களை செய்து தன்னுயிரை ஜீவ ஒளியாக்கி இன்றும் மக்களுக்கு ரூபம் இன்றி சக்தியாய் அருள் தரும் சித்தர்கள் ஏராளம்.

இன்று சித்தர்கள் என்றால் 18 பேர் மட்டுமே என தெரிந்த உண்மை ஆனால் சித்தர்கள் எண்ணிக்கை அவற்றிலும் அதிகம். அவ்வகையில் நாகப்பட்டினம் அடுத்த நாகூரில் ஸ்ரீ காங்கேய சித்தரின் ஜீவ பீடம் அமைந்துள்ளது. கவனிப்பாரற்று கிடந்த இந்த ஜீவ பீடத்தினை கண்டறிந்து அதனை சுத்தப்படுத்தி, மீண்டும் பூஜைகளை துவக்கியுள்ளனர் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை குழுவினர்.

இந்த ஜீவ பீடமானது எப்படி? அதன் வரலாறு என்ன என்று ஸ்ரீ தர்மசிந்தனை அறக்கட்டளை நிறுவனர் திரு.சரவணன் அவர்கள் கூறும் போது "நாகூரில் ஜீவ சமாதியான இந்த ஸ்ரீ காங்கேய சித்தர் கி.பி 14'ம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் இவர் 'உரிச்சொல் நிகண்டு' கூறும் 'நிகண்டு' நூலை இயற்றினார் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் இவரது சிலை வழிபாடு உள்ளதாகவும் தகவல். இவரை பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கூறும் போது 'இந்த ஸ்ரீ காங்கேய சித்தர் என்பவர் கோடியக்கரை அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் ஜீவ சமாதி அடைந்துள்ளார்' எனவும் தெரிவிக்கின்றனர்.

அவர்களின் இந்த கூற்றுப்படி இவரது சமாதியானது அமைந்துள்ளது. மேலும் இவரை பற்றிய தகவல்களை ஆராய்ந்து வருகிறோம். இந்த ஜீவ சமாதியானது 400 வருடங்கள் முற்பட்டது, ஒன்பது சாதுக்கள் இங்கு தங்கி பூஜை செய்து, காவடி எடுத்து அவற்றின் மூலம் மக்களிடம் அரிசி முதலிய பொருள்கள் யாசகம் பெற்று பூஜை செய்து வந்துள்ளனர். அவர்கள் காலத்திற்கு பிறகு இந்த ஜீவசமாதியானது சரிவர பராமரிக்கபடாமல் பூஜைகள் இன்றி பாழடைந்து வத்துள்ளது.

இந்த ஜீவ சமாதி அருகில் ஒர் மயானம் இருப்பதால் பொதுமக்களின் நடமாட்டம் இங்கு இல்லாததாலும் இந்த ஜீவ சமாதியானது கண்டுகொள்ளப்படாமல் இருந்து வந்துள்ளது. சுனாமி'க்கு முன்பு வரை இந்த பகுதியில் அதிக தேக்கு மரங்கள் இருந்து வந்துள்ளது. அவைகள் ஆக்கிரமிப்புகளாலும், அபகரிப்பாளர்களாலும் அகற்றப்பட்டு இவ்விடம் கவனிப்பாரற்று இருந்துள்ளது.

சிவ தீட்சை பெற்ற ஒரு அம்மையார் அவர்கள் இந்த ஜீவ சமாதியில் அவ்வபோது சிறு பூஜைகள் செய்து வந்தார். தற்போது இது எங்கள் கவனத்திற்கு வந்த பிறகு இதன் பூஜைகளை முழுமையாக நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்" என கூறினார்.

மேலும் இங்கு ஸ்ரீ காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் மாதம் தோறும் சிறப்பு பூஜைகள் மாலை 5.00 மணிக்கு நடைபெறவும், மாதம் தோறும் வரும் பெளர்ணமி அன்று சிறப்பு அபிசேகம் மற்றும் அன்னதானம் நடைபெறவும், பிரதி வாரம் குரு நாள் வியாழன் மற்றும், சோமவார தினம் திங்கள் கிழமை அன்றும் பூஜைகள் நடைபெறவும் இதுமட்டுமில்லாமல் மாதம் தோறும் வரும் பிரதோச நாளில் பூஜைகள் நடைபெறவும் பூஜை தினங்களில் சிவசின்னமான உருத்திராட்சம் வேண்டுவோருக்கு கட்டணம் ஏதும் இன்றி வழங்கப்பவும் ஏற்பாடுகள் சிவ சிந்தனை கொண்ட ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்" தெரிவித்தார்.

நாகூரில் சித்தர் பீடம் அமையபெற்றதை மக்கள் அனைவரும் வந்து பக்தியுடன் தரிசித்து செல்கின்றனர்.

சிவாய நம

Similar News