சீனாவிடம் சிக்கியதா நேபாளம்..? ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி கேட்டால், ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக ஊளையிடும் நேபாள பிரதமர்!

சீனாவிடம் சிக்கியதா நேபாளம்..? ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி கேட்டால், ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக ஊளையிடும் நேபாள பிரதமர்!

Update: 2020-06-29 07:37 GMT

திபெத் - நேபாள எல்லைகளுக்கிடையே ஓடும் ஆறுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா ஆறுகளின் நீரோட்டத்தை திசை திருப்புவதன் மூலம் நிலப்பரப்பை அபகரிப்பதாகவும், இதன்படி நேபாளத்துக்கு சொந்தமான ரூய் கிராமத்தை முழுமையாக சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், ஆனால் நேபாளத்தை ஆளும் சீன ஆதரவு பிரதமரான ஒலி ஷர்மா இதை கண்டுகொள்ளாமல் இந்தியாவுடன் மோதி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

சமீபத்தில் சீனாவால் நாடு கடத்தப்பட்ட திபெத் தலைவர் ஒருவர் கூறுகையில் நேபாளம் சீனாவுடன் நெருங்குவது ஆபத்தானது, ஆரம்பத்தில் சீனா இப்படித்தான் திபெத்திடம் நெருங்கியது, முதலில் சாலை அமைக்கப்போவதாக கூறி ஆசை காட்டும், பிறகு அந்த சாலைகள் வழியாக தனது லாரிகள், துப்பாக்கி படைகள், பீரங்கி படைகளை கொண்டு வந்து கடைசியில் திபெத்தையே ஆக்கிரமித்துக் கொண்டது, எனவே சீனர்கள் விரிக்கும் ஆசை வலையில் நேபாளம் மயங்கி சிக்கி விடக் கூடாது என்று கூறியுள்ளார்.

தனது பினாமி அரசாக நேபாளத்தில் உள்ள ஒலி ஷர்மா அரசை பயன்படுத்தி நேபாளத்தை ஆக்கிரமிப்பதன் மூலம் இமயமலையின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய வரைபட விவகாரத்தை தொடர்து இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி கூறியுள்ளார்.

உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சில பகுதிகளை உரிமை கொண்டாடுவதோடு, அவற்றை இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது.

இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காத்மாண்டுவில் பேசிய கேபி சர்மா, இந்திய தூதரகம் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், காத்மண்டுவில் பல்வேறு இடங்களில், தனது ஆட்சியை கவிழ்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். 

Similar News