கொரோனா வைரசை மாய, மந்திரத்தில் குணப்படுத்துவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த இஸ்மாயில் பாபா - தர்காவில் அலேக்காக தூக்கிய காவல்துறை!

கொரோனா வைரசை மாய, மந்திரத்தில் குணப்படுத்துவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த இஸ்மாயில் பாபா - தர்காவில் அலேக்காக தூக்கிய காவல்துறை!

Update: 2020-07-27 02:52 GMT

கொரோனா மற்றும் பிற வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கிறேன் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிய மொஹமட் இஸ்மாயில் அல்லது கொரோனா பாபா என்று அழைக்கப்படுபவரை சைபராபாத் போலீசார் சனிக்கிழமை ஹபீஸ்பேட்டில் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம், ஹபீஸ் பெட் ஹனிஃப் காலனியை சேர்ந்தவர் இஸ்மாயில் பாபா. இவர் கொரோனா நோயை குணப்படுத்துவதாக கூறி, காய்ச்சல், இருமல், சளி அறிகுறியுடன் வருபவர்களுக்கு மந்திரங்கள் செய்து எலுமிச்சை பழம் மற்றும் விபூதி வழங்கி ஏமாற்றி வந்துள்ளார்.

முதலில் 'ஹபீஸ்பேட் தர்பார்' என்ற வாட்ஸ்அப் குழுவை இஸ்மாயில் பாபா உருவாக்கினார். அந்தக் குழுவில் உள்ளவர்களிடம் எந்தவிதமான வியாதிகளிலிருந்தும் குணமடைய கொரோனா பாபாவை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஒரு தர்காவில் வைத்து இதற்கான வேலையை செய்துள்ளார்.

நோய் அறிகுறிகளுடன் தன்னிடம் வருபவர்களிடம் இருந்து, 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளார். இதுபோல 70க்கும் மேற்பட்ட ம மக்கள் ஏமாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவரை கண்காணித்து வந்த காவல்துறையினர் , இஸ்மாயில் பாபா மோசடி செய்வதை கண்டுபிடித்து கைது செய்தனர்.

47 வயதான இஸ்மாயில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக மியாப்பூர் போலீசார் தெரிவித்தனர். ஒரு தகவலின் அடிப்படையில், சனிக்கிழமை தர்கா வளாகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது இஸ்மாயில் பாபாவை சந்திக்க ஏராளமான மக்கள் கூடிவந்ததைக் கண்டறிந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்மாயில் ஒரு 'பாபா'வாக இங்கு பணியாற்றத் தொடங்கியதாகவும், சிறப்பு பிரார்த்தனை செய்து வருவதாகவும் போலீசார் கண்டுபிடித்தனர். வெள்ளிக்கிழமைகளில் அவர் பிரார்த்தனை செய்வார் என்று கூறப்படுகிறது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது ஐபிசி (மோசடி), பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்றுநோய்கள் சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய பிரிவு 420 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆதாரம்: https://www.newindianexpress.com/cities/hyderabad/2020/jul/26/corona-baba-rakes-in-moolah-as-virus-fear-rages-2174858.html

Similar News