#பிரேக்கிங் : பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தில் இருந்து கேரள அரசை வெளியேற்றிய உச்சநீதிமன்றம்.! #Padmanabaswamy #Kelara #SupremeCourt
#பிரேக்கிங் : பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தில் இருந்து கேரள அரசை வெளியேற்றிய உச்சநீதிமன்றம்.! #Padmanabaswamy #Kelara #SupremeCourt
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை மாவட்ட நீதிபதி தலைமையிலான குழு மேற்பார்வையிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்,
திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான 5 பேர் குழு பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை உள்ளது எனவும்
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்க கேரள மாநில அரசுக்கு உரிமை இல்லை எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பூஜைகள் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்ள திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு முழு உரிமை உள்ளது மேலும்
பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை கேரள மாநில அரசிடம் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.