கிராண்ட் ஃப்ளவர் கழுத்தில் கத்தி வைத்த பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் - பரபரப்பு குற்றச்சாட்டு .! #Pakistan #Cricket

கிராண்ட் ஃப்ளவர் கழுத்தில் கத்தி வைத்த பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் - பரபரப்பு குற்றச்சாட்டு .! #Pakistan #Cricket

Update: 2020-07-03 05:37 GMT

பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் ஒரு சிறிய கருத்து வேறுபாடு தொடர்பாக யூனிஸ் கான் தன் தொண்டையில் கத்தியை வைத்த சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான கிராண்ட் ஃப்ளவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் 2014 முதல் 2019 வரை பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார்.

ஃப்ளவர் 'ஃபாலோ ஆன்' என்ற கிரிக்கெட் பாட்காஸ்டில் பேசிக் கொண்டிருந்தபோது, ​​அவருடைய பேட்டிங் டிப்ஸை யூனிஸ் கான் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்த விவாதத்தில் யூனிஸ் கான் ரொம்பவே கடுப்பாகி, கிராண்ட் ஃப்ளவர் கழுத்தில் கத்தி வைக்கும் அளவுக்கு சென்று விட்டதாகக் கூறினார். மிக்கி ஆர்தர் தலையிட்டு யூனிஸ் கானை நிறுத்த வேண்டியிருந்தது என்றும் கூறினார். 



டெஸ்டின் போது அவர்கள் பிரிஸ்பேனில் இருந்தனர், காலை உணவின் போது, ஃப்ளவர் அவருக்கு சில பேட்டிங் ஆலோசனைகளை வழங்க முயன்றார். "ஆனால் அவர் என் ஆலோசனையை எடுத்துக் கொள்ளவில்லை, என் தொண்டையில் ஒரு கத்தியைக் கொண்டு வந்து வைத்தார். மிக்கி ஆர்தர் உடன் அமர்ந்திருந்தார், அவர் தலையிட வேண்டியிருந்தது. ஆம், இது சுவாரஸ்யமானது. ஆனால் அது பயிற்சியின் ஒரு பகுதியாகும். நான் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, ஆனால் நான் இருக்கும் நிலையில் இருப்பது மிகவும் அதிர்ஷ்டம்." என்று தெரிவித்தார்.

யூனிஸ் கான் பிரிஸ்பேனில் ஒரே ஒரு டெஸ்ட் மட்டுமே விளையாடியுள்ளார். அந்த போட்டியின் போது அவர் முதல் இன்னிங்ஸில் கோல்டன் டக் மற்றும் இரண்டாவது போட்டியில் 65 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியில் அஹ்மத் ஷெஜாத் என்று இன்னொரு சுவாரஸ்யமான கதாபாத்திரம் இருப்பதாக கூறினார். அவர் ஒரு திறமையான பேட்ஸ்மேன், ஆனால் மிகவும் கலகக்காரர் என்று விவரித்தார். "ஒவ்வொரு அணிக்கும் ஒரு கிளர்ச்சி வீரர் உண்டு. சில நேரங்களில் அது அவர்களை சிறந்த வீரர்களாக ஆக்குகிறது, சில சமயங்களில் அவ்வாறு இல்லை." கடந்த ஆண்டு பாகிஸ்தான் பேட்டிங் கோச்சாக ஃப்ளவர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை, ​​பாகிஸ்தானைப் பற்றி அவர் எதை மிஸ் பண்ணுவார் என்று கேட்ட போது, "முதுகில் குத்தும் முன்னாள் விளையாட்டு வீரர்கள்" என்று ஃப்ளவர் பதிலளித்தார். ஃப்ளவர் வெளியேறிய பிறகு பாகிஸ்தானின் பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ் கான் நியமிக்கப்பட்டார்.

2007 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் உலகக் கோப்பையிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறிய பின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பாப் வூல்மர் அவரது ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக செய்திகள் வந்தன. கோபமடைந்த சில கிரிக்கெட் வீரர் அல்லது ரசிகர் அவரைக் கொன்றதாக வதந்திகளும் உலா வந்தன.

கிராண்ட் ஃப்ளவர் தற்போது இலங்கையில் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

Similar News