மேலாடை இல்லாமல் உறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரியில் சீன வீரர்கள் - எந்த சூழ்நிலை வந்தாலும் சமாளிக்க பிழிந்தெடுக்கப்படும் சோகம்!

மேலாடை இல்லாமல் உறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரியில் சீன வீரர்கள் - எந்த சூழ்நிலை வந்தாலும் சமாளிக்க பிழிந்தெடுக்கப்படும் சோகம்!

Update: 2020-06-28 04:52 GMT

சீன மக்கள் விடுதலை இராணுவம் வீரர்களுக்கு பனி, வெப்பம் போன்ற தீவிர நிலைமைகளில் பயிற்சியளிக்கும் படங்கள் வெளியாகியுள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவம் உலகின் மிகப்பெரிய இராணுவமாகும். இதில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட  துருப்புக்கள் உள்ளனர்.

சீன விடுதலை இராணுவத்தின் வீரர்கள் சீனாவின் ஹெய்ஹேயில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் குளிர்கால பயிற்சியின்போது மைனஸ் 30 டிகிரி செல்சியஸ்சுக்கும் குறைவான வெப்பநிலையில் தங்கள் உடல்கள் மீது பனியை வீசுகிறார்கள். சின்ஜியாங் உய்குர் பிராந்தியத்தில் கடுமையான பனிப்பொழிவுகளுக்கு மத்தியில், ஒரு இராணுவ தளத்தில் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி செய்கிறார்கள்.






 





 


கோடைக்கால பயிற்சி, குளிர்காலப் பயிற்சி என்று இரண்டு முறைகளில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. போர் வந்தால் அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ளும் வகையில் இவர்களுக்குச் சீன அரசு பிரத்யேக பயிற்சி அளித்து வருகிறது. 

மைனஸ் 30 டிகிரி வெப்பநிலை நிலவும் பனி பிரதேசத்தில் மேலாடை எதுவும் இல்லாமல் உருண்டு, புரண்டு பயிற்சி மேற்கொள்கின்றனர். 

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் கடுங்குளிர் நிலவும் மலைப் பிரதேசங்களையே எல்லைகளாகக் கொண்டிருக்கிறது, சீனா. அதனால், பிரச்னை என்று வந்தால் சமாளிக்கும் வகையில் குளிர்காலப் பயிற்சியை மேற்கொள்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. 

Similar News