கொரோனா தடுப்பூசியை இந்தியா கண்டுபிடித்துவிட்டதா.? PM Care மூலமாக பெற்ற நிதியில் ரூ.100 கோடி கொரோனா மருந்து கண்டுபிடிப்பிற்காக ஒதுக்கப்பட்டது!

கொரோனா தடுப்பூசியை இந்தியா கண்டுபிடித்துவிட்டதா.? PM Care மூலமாக பெற்ற நிதியில் ரூ.100 கோடி கொரோனா மருந்து கண்டுபிடிப்பிற்காக ஒதுக்கப்பட்டது!

Update: 2020-07-01 04:39 GMT

பி.எம். கேர்ஸ் என்ற அறக்கட்டளை மூலமாக பெறப்பட்ட நிதியை கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க பிரதமர் மோடி ஒதுக்கிய நிலையில், தடுப்பூசி குறித்து பிரதமர் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உலகில் பல்வேறு நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில், மும்முரமாக களமிறங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. விரைவில் கொரோனாவுக்கான தடுப்பூசியை உலகம் அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலும் பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் பல கட்ட சோதனை மேற்கொண்டு வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கான மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு பரிசோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

நாட்டு மக்கள் நிதியுதவி அளித்துள்ள PM Cares என்ற அறக்கட்டளை மூலமாக பெறப்பட்ட தொகையில், ரூ.100 கோடியை மருந்து தயாரிப்புக்காக பிரதமர் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சில வகை மருந்துகளை, மனிதர்களிடம் பரிசோதிக்கும் நிலைக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்நிலையில் தடுப்பு மருந்து அரசுக்கு கிடைத்ததும், அதனை எப்படி முறைப்படி பாதிக்கப்பட்டவர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது குறித்து பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.

அரசின் கைக்கு மருந்து வந்ததும், மருத்துவ பணியாளர்களுக்கும், கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் முதலில் இவை கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில் பொதுமக்களுக்கான பயன்பாட்டுக்கு வரும் போது, இந்த மருந்து குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்றும் இவற்றுக்கான தொழில்நுட்பம், விரைந்த தயாரிப்பு, தனியார் பங்கேற்பு குறித்தும் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

Similar News