எங்கே இருந்தார் ராகுல் காந்தி? நிலைக்குழு கூட்டங்களைத் தவற விட்டது ஏன்? #RahulGandhi #Galwan #Ladakh
எங்கே இருந்தார் ராகுல் காந்தி? நிலைக்குழு கூட்டங்களைத் தவற விட்டது ஏன்? #RahulGandhi #Galwan #Ladakh
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் நாடே சீனாவின் துரோகத்தை எண்ணிக் கொந்தளித்துக் கொண்டு இருக்கும் போது காங்கிரஸ் கட்சியோ வழக்கம் போல் இதிலும் அரசியல் செய்கிறது.
"நம் வீரர்களைக் கொல்ல சீனாவுக்கு என்ன தைரியம்?"
"நமது நிலப்பகுதியை அபகரிக்க அவர்களுக்கு என்ன தைரியம்?"
"என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரிந்தே ஆக வேண்டும்!"
"லடாக்கில் சீனர்கள் இந்திய நிலப்பரப்பை ஆக்ககரமித்துள்ளனரா?" இவ்வாறெல்லாம் கடந்த ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு உணர்ச்சி பொங்க கேள்வி எழுப்பி வரும் ராகுல் காந்திக்கு தேசப்பாதுகாப்பு குறித்த விஷயங்களில் இப்போது தான் ஆர்வம் வருகிறாரா இல்லை அவருக்கு எப்போதுமே இதில் ஆர்வம் அதிகமா என்று ஆய்வு செய்ய பொது வெளியில் கிடைக்கும் சில தகவல்களை அலசிப் பார்ப்போம்.
தேசப் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் ராகுல் காந்தியும் ஒரு உறுப்பினர். இந்த நிலைக்குழுவின் ஒரு கூட்டத்தில் கூட ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. எனவே கடந்த இரண்டு மாதங்களாக லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது என்று செய்திகள் வந்த போதும் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின்னரே ராகுல் காந்திக்கு இந்த கேள்விகள், சந்தேகங்கள் எழுந்தன என்பது, இந்த விஷயத்தில் துளிக்கூட ஆர்வம் இல்லாத அவர் அரசியல் செய்வதற்காக இந்த துரதிருஷ்டவசமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் என்பது தெரிய வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மறுசீரமைக்கப்பட்ட பிறகு பாதுகாப்பு நிலைக்குழு 11 முறை சந்தித்திருக்கிறது. 2019ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு முறை, நவம்பரில் 3 முறை, டிசம்பரில் ஒரு முறை, 2020ம் ஆண்டு பிப்ரவரியில் 5 முறை மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு முறை கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் 17 மற்றும் 21 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலைக்குழு சந்தித்த போது ராகுல் காந்தி இந்தியாவில் இல்லை. கொரோனா வைரஸைப் பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் பிப்ரவரி 28ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு இத்தாலியில் இருந்துள்ளார்.