கொரோனாவை அழிக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு!

கொரோனாவை அழிக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு!

Update: 2020-06-09 11:37 GMT

கொரோனா வைரஸை அழிக்கும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்பட்டன பிலிப்பைன்ஸ் நாடு அறிவித்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உலகளவில் அமெரிக்கா மிக அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்கள் அனைத்தும் விடுமுறையில் உள்ளது. கொரோனா கட்டுக்குள் கொண்டு வந்ததற்கு பிறகு தான் அனைத்து கல்வி நிலையங்களும் திறக்கப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே கொரோனா வைரஸை அழிப்பதற்கு தடுப்பூசியை கண்டுபிடிக்க ஆறு மாதத்துக்கு மேலாக பல நாடுகள் ஆராய்ச்சியை நடத்தி வருகிறது. ஆனால், இதுவரை எந்த நாடும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை.

தற்போது கொரோனா வைரஸை அழிக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. இதனைப்பற்றி பிலிப்பைன்ஸ் கல்வித்துறை செயலாளர் லியோனர் பிரியோனஸ் கூறியது: கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்க இயலாது. தனிமனித இடைவெளியை பின்பற்றி குழந்தைகளை பள்ளியில் அமர வைக்க இயலாது குழந்தைகள் தங்களுடைய நண்பர்கலின் பக்கத்தில் செல்லும் போது வைரஸ் பரவ வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் தொடங்கும். மேலும், வறுமையான குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் கல்வி பற்றி கவலை எழுந்துள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு சிந்தித்து வருகிறோம் என கூறியுள்ளார். 

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2554670&fbclid=IwAR0A_BbqPLrMugIrVY7cc8TssCqVb_TwweoiCR6-gNo02wjhSwS-GxP04PY

Similar News