இந்து மதத்தின் சடங்குகளுக்கு பின்னிருக்கும் ஆன்மீகமும் ஆச்சரியமூட்டும் அறிவியலும்.!

இந்து மதத்தின் சடங்குகளுக்கு பின்னிருக்கும் ஆன்மீகமும் ஆச்சரியமூட்டும் அறிவியலும்.!

Update: 2020-07-28 02:08 GMT

இந்தியாவில் ஏராளமான சடங்குகளும் சம்பிர்தாயங்களும் செய்யப்படுவது வழக்கம். இந்து மதத்தில் மேற்கொள்ளப்படும் சடங்குகள் மேலோட்டமாகவே இன்று அணுகப்படுகின்றன, ஆனால் அவை ஆழ்ந்த அர்த்தங்களை கொண்டிருப்பதை நம் சாஸ்திரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

தீபம் ஏற்றுவது ஏன்?

இன்று ஏரத்தாள அனைத்து இந்து மக்களின் இல்லத்திலும் கடவுளின் முன் தினசரி தீபம் ஏற்றப்படுகிறது. சில வீடுகளில் மாலை நேரத்திலும், சில வீடுகளில் காலையிலும் மாலையிலும் என தீபம் ஏற்றுதல் என்கிற நிகழ்வு வழக்கமான ஒரு விஷயம். நல்ல காரியங்கள் துவங்கி அனைத்திலும் மங்களகரமான விஷயமாக தீபம் கருதப்படுகிறது. காரணம் இருள் என்பது அறியாமையை அகற்றுகிற ஒளி. ஞான ஒளியை ஒருவருக்கு தர வல்லது என்பதினாலேயே.. அறியாமை என்னும் இருள் அகல, தீபம் ஏற்றப்படுகிறது. மற்றும் கடவுளுக்கு தீபம் ஏற்றுகிற அதே வேளையில், தீபமே கடவுளாகவும் பாவிக்கப்படுகிறது.

வெளிச்சம் என்பது எந்த ரூபத்திலும் ஏற்றப்படலாமே, மின் விளக்குகளை ஒளிரச்செய்யலாமா என்கிற கேள்விகளெல்லாம் சிலருக்கு வரும். நெய், அல்லது எண்ணெய் என்பது நம் கர்ம வினைகளுக்கு, முற்பிறவி வாசனைகளுக்கு ஒப்பானது அதில் தீபம் ஏற்றுகிற போது உருகுகிற நெய்யினை போல், நாம் ஆன்மீக ஞானத்தை நமக்குள் ஏற்றுகிற போது அந்த ஒளியில் நம் கர்ம வினைகள் கரையும் என்பது நம்பிக்கை.

பூஜை அறைகள் எதற்காக?

இது ஒரு குறியீடு. உலகம் என்னும் அவன் இல்லத்தில் நாம் வசிக்கிறோம் என்கிற குறியீடு. பொருள்தன்மையில் அந்த இல்லத்தை நாம் உருவாக்கியிருந்தாலும் பூஜைஅறையில் இருக்க கூடிய கடவுளே இந்த அகிலம் அனைத்திற்கும் உரிமையானவர். ஒவ்வொறு இல்லத்திலும் இது போன்ற பூஜைக்கென பிரத்யேக அறையை அமைத்திருக்க காரணம் ஒவ்வொறு நாளும், மந்திரங்களின் மூலமும், தெய்வீக நறுமணங்கள், மலர்கள் பிரார்த்தனைகள், தியானம் இவற்றால் முழுமையான நல்லதிர்வுகள் நிரம்பிய இடமாக பூஜை அறைகள் இருக்கும், வீட்டில் இருப்போரில் ஒருவர் சற்று தோய்வாக உணர்ந்தால் கூட பூஜைஅறையில் சில நேரம் செலவிட்டால் உடனடியாக மனம் அமைதியடைவதன் காரணம் அங்கே நல்லதிர்வுகள் நிரம்பியிருப்பதால் தான்.

நமஸ்கரிப்பது எதற்காக?

வழிபடுகிற போது, ஒருவரை பார்த்து கொள்கிற போது வயது வித்தியாசம் ஏதுமின்றி நாம் நமஸ்கரிக்கிறோம் ஏன்? ஒருவரை வரவேற்க, ஒருவருக்கு நன்றி சொல்ல நம் அன்பை சொல்ல அனைத்திற்கும் நம் இருகைகளை கூப்பி நம் தலை வணங்கி ஒருவருக்கு வணக்கம் செலுத்துகிற போது நம் அகந்தை அழிகிறது. நம் இருக்ககூடிய இறைஎ 

Similar News