"நாம் வாழ்வதும் சாவதும் இந்தியாவிற்கும், அதன் சுதந்திரத்துக்கும் தான். இது நம் நம்பிக்கை. அதில் எந்த சமரசமும் இல்லை"- டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினம் இன்று.! #ShyamaPrasadMukherji

"நாம் வாழ்வதும் சாவதும் இந்தியாவிற்கும், அதன் சுதந்திரத்துக்கும் தான். இது நம் நம்பிக்கை. அதில் எந்த சமரசமும் இல்லை"- டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினம் இன்று.! #ShyamaPrasadMukherji

Update: 2020-07-06 05:30 GMT

"நாம் வாழ்வதும் சாவதும் இந்தியாவிற்கும், அதன் சுதந்திரத்துக்கும் தான். இது நம் நம்பிக்கை. அதில் எந்த சமரசமும் இல்லை"

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் இந்த வார்த்தைகள் அவர் எது வேண்டுமென்று விரும்பினார், உழைத்தார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. இன்று, இந்த தேசியவாத தலைவரின் பிறந்த தினம் ஆகும்.

இந்திய வரலாற்றின் ஆண்டுகளில், நவீன இந்தியாவை உருவாக்குவதில் சியாமா பிரசாத் பெற வேண்டிய தகுதியான இடத்தை வரலாற்று ஆசிரியர்கள் வேண்டுமென்றே மறுத்து/மறைத்து வைத்துள்ளனர். இந்தியாவின் ஜனநாயக மனப்பான்மைக்கு, தன்னலமற்ற தேசபக்தரான முகர்ஜியின் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. அவர் இந்தியாவின் கடந்த காலத்தில் மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் தனது அடையாளத்தை பதித்துள்ளார். இந்தியாவின் தேசிய முன்னேற்றத்திற்கான முகர்ஜியின் மகத்தான பார்வை அவரது சொந்த வார்த்தைகளில் நாம் பார்க்கலாம்.

"மக்களின் தன்மைக்கு ஏற்ப நாடுகள் வாழ்கின்றன அல்லது மரணிக்கின்றன. செல்வம், ஆயுதங்கள், ஒழுக்கமான படைகள் மற்றும் கடற்படைகள் மற்றும் விமானப்படைகள் ஆகியவை அற்புதமான சேவையாகும், ஆனால் மக்களின் நடத்தை(character) இளைஞர்களின் ஒழுக்கமே, ஒரு நாட்டின் வாழ்வையோ அல்லது மரணத்தையோ தீர்மானிக்கிறது. "

அரசியல், கொள்கை, தேசிய நலன், கல்வி மற்றும் கலாச்சார தேசியவாதம் ஆகிய பல துறைகளில் முத்திரை பதித்தார் முகர்ஜி. இப்படிப்பட்ட ஒரு தலைவரை இந்தியா அரிதாகவே கண்டது. நவீன இந்தியாவை வடிவமைப்பதில் சியாமா பிரசாத் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டிருந்தார் என்பதை அவரது வாழ்க்கையை கவனமாகப் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இந்து மகாசபாவின் தலைவராக, முகர்ஜி இந்து குரல்களை ஒன்றிணைத்து முஸ்லிம் லீக்கின் பிளவுபடுத்தும் செயல்களுக்கு எதிராக இந்துக்களை பாதுகாத்தார். இருப்பினும், இந்து மகாசபாவை இந்துக்களுக்கு மட்டும் என்று அவர் நினைக்கவில்லை, எனவே அனைத்து மக்களுக்கும் சேவையை வழங்குவதற்கான ஒரு தளமாக அதைப் பயன்படுத்தினார்.

ஆரம்பத்தில் இந்தியப் பிரிவினைக்கு வலுவான எதிரியாக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி, பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் 1946ல் பரவலாக நடந்த இனக் கலவரங்களைத் தொடர்ந்து பிரிவினைக்கு ஆதரவளித்தார். முழு மேற்கு வங்காளத்தையும் இணைத்து 'Greater Paksitan' உருவாக்க நினைத்த முகம்மது அலி ஜின்னாவின் திட்டத்தை தவிடு பொடியாக்கினார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும், மகாத்மா காந்தியின் அழைப்பின் பேரில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இடைக்கால மத்திய அரசில் சியாமா பிரசாத் சேர்ந்தார்.

அவர் மத்திய தொழில் மற்றும் விநியோகத் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். தொழில்துறை அமைச்சராக, முகர்ஜி இந்தியாவின் தொழில்மயமாக்கலின் முதல் விதைகளை விதைத்தார். அவர் இந்தியாவின் தொழில்துறை கொள்கைக்கு அடித்தளம் அமைத்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கான தளத்தை தயார் செய்தார். மத்திய தொழில்துறை அமைச்சராக, அகில இந்திய கைவினைப்பொருள் வாரியம், அகில இந்திய கைத்தறி வாரியம், மத்திய பட்டு வாரியம் மற்றும் காதி மற்றும் கிராம தொழில்துறை வாரியம், ஜவுளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தொழில்துறை நிதிக் கழகம் ஆகியவை முகர்ஜியின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டன.

அது 1949 ஆம் ஆண்டு. பாகிஸ்தானில் இந்து சிறுபான்மையினர் மிருகத்தனமாக கொல்லப்பட்டனர், இதன் விளைவாக மில்லியன் கணக்கான இந்து அகதிகள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, நேரு டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானை அழைத்தார், இது 1950 ல் டெல்லி கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வழிவகுத்தது. 'இரு தரப்பிலும் உள்ள மத சிறுபான்மையினரின் அச்சங்களை நீக்குவதாக' கூறியது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் சிறுபான்மை ஆணையங்களை நிறுவுவதற்கும் சிறுபான்மை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்போதைய பாகிஸ்தான் பிரதமரின் அழைப்பிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த முகர்ஜி, நேரு-லியாகத் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அரசாங்கத்தின் கொள்கையை கடுமையாக எதிர்த்ததோடு மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினார்.

விநாயக் தாமோதர் சாவர்க்கருடன், முகர்ஜி நவீன இந்துத்துவாவின் பிதாமகராக கருதப்படுகிறார். தேசிய உணர்வை எழுப்ப ஒரு கருவியாக இந்துத்துவாவைப் பார்த்தார். அவரைப் பொறுத்தவரை, இது இந்தியாவின் வளமான நாகரிகத்திற்கும் அதன் புனித கலாச்சாரத்திற்கும் ஒரு ஆதாரமாக இருந்தது, மேலும் உலகளாவிய சகோதரத்துவத்தின் செய்தியைக் கொண்டுள்ளது. 1951 ஆம் ஆண்டில் பாரதிய ஜன சங்கம் (BJS) அமைப்பதன் மூலம் இந்திய அரசியலில் இந்துத்துவத்தைப் பயன்படுத்துவதில் முதல் படியை எடுத்தது முகர்ஜி தான், பின்னர் அதுதான் பாரதீய ஜனதா (பிஜேபி) ஆனது. இந்துத்துவா, கலாச்சார தேசியவாதம் மற்றும் தடையற்ற சந்தை பொருளாதாரம் ஆகியவை பாரதிய ஜன சங்கம் நின்ற தூண்கள் ஆகும்.

"அரசியல் சுதந்திரம் என்பது தேசிய சுயத்தை உணர்ந்துகொண்டால் மட்டுமே அர்த்தமுள்ளதாகிறது."

BJSன் முதல் அறிக்கையில் இது தான் உணர்த்தப்பட்டது. ஜன் சங்கத்தின் மூலம், முகர்ஜி இந்தியாவில் ஒரு மாற்று அரசியல் நீரோட்டத்தை உருவாக்கினார். காங்கிரசுக்கு முதல் உண்மையான எதிர்க்கட்சியாக BJS இருந்தது. 1951 முதல் பொதுத் தேர்தலில், சியாமா பிரசாத் முகர்ஜி உட்பட மூன்று உறுப்பினர்களை மட்டுமே முதல் மக்களவைக்கு அனுப்ப ஜன் சங்கத்தால் முடிந்தது. ஜன் சங்கம், மற்ற சிறு கட்சிகளுடன் சேர்ந்து, நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கட்சியை (NDP) உருவாக்கி, அதன் தலைவராக முகர்ஜி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவராக மக்களவையில் அவர் வகித்த பங்கு அவருக்கு 'பாராளுமன்றத்தின் சிங்கம்' என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் ஒருங்கிணைத்ததற்காக முகர்ஜி எப்போதும் நினைவில் இருப்பார். அவர் தனது பிரபலமான முழக்கமான "ஏக் தேஷ் மே டோ பிரதான், வி விதான், நிஷான் நஹி சாலங்கே, நஹி சாலங்கே" மூலம் ஒரு எழுச்சியை எழுதினார். (இரண்டு பிரதமர்கள், இரண்டு அரசியலமைப்புகள் மற்றும் இரண்டு தேசியக் கொடிகளை அனுமதிக்கும் ஒரு அமைப்பை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது). ஜம்மு-காஷ்மீரில் சந்தேகத்திற்குரிய 'பெர்மிட் ராஜ்' எதிர்ப்பை எதிர்த்து, முகர்ஜி 1953 ல் மாநில அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் இந்திய குடிமகனாக காஷ்மீர் சென்றார். ஜம்மு &காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும், எனவே ஒரு இந்திய குடிமகனுக்கு 'நுழைவு அனுமதி' தேவையில்லை. ஆனால், லகான்பூரில் காஷ்மீருக்கு எல்லை தாண்டும்போது, ​​முகர்ஜி அப்போதைய ஜம்மு-காஷ்மீர் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு பாழடைந்த வீட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, அவரது உடல்நிலை மோசமடைந்தது, இந்தியாவை ஒருங்கிணைப்பதற்கான தனது முயற்சிக்கு தன் உயிரை விலை கொடுத்து காவலில் இருந்தபோது அந்த தேசபக்தர் இறந்தார்.

காவலில் உள்ள முகர்ஜியின் மர்மமான மரணம் மனக்கசப்பையும் சந்தேகத்தையும் எழுப்பியது. அவரது வயதான தாய் ஜோக்மயா தேவி உட்பட பலரும் , அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு விசாரணை வேண்டி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நேரு அரசாங்கத்தால் எந்த விசாரணை ஆணையமும் அமைக்கப்படவில்லை. இந்த நிகழ்வு இந்தியாவில் மர்மமான அரசியல் மரணங்களின் வரலாற்றில் மற்றொரு அத்தியாயமாக மாறியது.

ஆனால் முகர்ஜியின் தியாகம் ஜம்மு-காஷ்மீரில் வஜீர்-இ-ஆசாம் (பிரதமர்) மற்றும் சதர்-இ-ரியாசாத் (ஜனாதிபதி) பதவியை நீக்க நேரு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது. அவரது தியாகம் ஜம்மு-காஷ்மீரை இந்திய அரசியலமைப்பு, யூனியன் பாராளுமன்றம், இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் கொண்டுவர இந்திய அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது. 1953 வரை, இந்த நிறுவனங்களுக்கு அங்கு எந்தப் பங்கும் இல்லை. சியாமா பிரசாத் முகர்ஜியின் சேவைகள் நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் நாம் அவரை இழந்தோம். இருப்பினும், அவர் விட்டுச் சென்ற மரபு, தேசியவாதம் மற்றும் தேசத்தை வழிநடத்தும். இது தலைமுறைகளின் வாழ்க்கையை ஊக்குவிக்கும்.

முகர்ஜி ஒரு தேசியவாதி. 'நாடு தான் முதலில்' என்பது அவரது கொள்கை, 'வாழு, வாழ விடு' என்பது அவரது வாழ்க்கையின் குறிக்கோள். அவர் தேசத்தின் நலனுக்காக வாழ்ந்து இறந்தார். ஒரு முற்போக்கான அரசியல் சிந்தனையாளராக, கல்வி மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்த முன்னோக்கு பார்வைகளுக்காக முகர்ஜி எப்போதும் நினைவுகூரப்படுவார். தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு தலைவராக, அணுசக்தி குறித்த அவரது கருத்து அவரது காலத்தை விட மிகவும் முன்னால் இருந்தது. ஒரு தத்துவஞானி-அரசியல்வாதியாக, அண்டை நாடுகளுடன் வலுவான இருதரப்பு உறவுகளை ஏற்படுத்துவதில் முகர்ஜிக்கு தனது சொந்த பார்வை இருந்தது. பலவிதமான பிரச்சினைகள் குறித்த அவரது உரைகளின் சில சிறப்பம்சங்கள் இங்கே. உரைகள் பழையவை என்றாலும், அதன் உள்ளடக்கம் மற்றும் செய்தி இன்னும் ஊக்கமளிக்கும் மற்றும் பொருத்தமானவை.

கல்வியில்

"ஒரு புதிய இந்தியாவை மீண்டும் உருவாக்குவதில் இந்திய பல்கலைக்கழகங்கள் பங்கு வகிக்க வேண்டும். அவர்கள் தங்கள் பழைய மாணவர்களை இந்தியாவின் வரலாறு மற்றும் நாகரிகத்தின் படிப்பினைகளுடன் நிறைவுசெய்து, ஒற்றுமை, வலிமை மற்றும் அச்சமற்ற தன்மையின் சாரத்தை அவர்களுக்குள் ஊக்குவிக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு திறமையுடனும் அறிவிற்கும் ஊக்கமளித்து, தேசத்தின் சேவைக்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். "

வெளிநாட்டு உறவுகள் குறித்து

"இந்தியர்கள் தனது அண்டை மக்களுடன் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். இந்திய நாட்டினர் வெளிநாட்டு நிலங்களுக்குச் சென்றபோது, ​​அவர்கள் ஆயுதங்களை அல்ல, வெடிமருந்துகளை அல்ல, மாறாக அமைதி மற்றும் நல்லெண்ணத்தின் செய்திகளை எடுத்துச் சென்றனர். "

அணுசக்தி மீது

"இந்தியா வெறும் பார்வையாளராக இருக்க முடியாது, குறிப்பாக அணுசக்தியின் வளர்ச்சிக்கு அனைத்து மூலப்பொருட்களும் ஏராளமாக இருக்கும்போது."

"அணுசக்தி பூமியில் சொர்க்கத்தை உருவாக்க முடியும் மற்றும் மனிதகுலத்தின் பெரும்பகுதியை விடுவிக்கும். அணுசக்தி அளவில் வரம்பற்றதாகவும், உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் கொண்டு செல்லக்கூடியதாகவும், மனிதகுலத்தின் ஒவ்வொரு தேவைக்கும் பொருந்தக்கூடியதாகவும் இருக்கக்கூடும். " 

Author: Saswat Panigrahi; OpIndia

Similar News