நெய்யிற்கு இருக்கும் தெய்வீகத்தன்மையின் ரகசியம் - கடவுளுக்கு நெய் தீபம் எதற்காக?

நெய்யிற்கு இருக்கும் தெய்வீகத்தன்மையின் ரகசியம் - கடவுளுக்கு நெய் தீபம் எதற்காக?

Update: 2020-07-15 02:18 GMT

இந்திய உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவது நெய். இந்த நாட்டு மக்கள் நெய்யை அதிகமாக பயன்படுத்துவதற்கு ஆழமான வரலாறு கூட உண்டு. மிகத்தூய்மையான நெய்யில் நிரம்ப சத்துகள் இருக்கின்றன. குறிப்பாக கொழுப்பு. இதையே இதன் பலவீனமாகவும் கருதப்படுகிறது. கொழுப்பு சத்து அதிகம் இருப்பவர்கள் நெய்யை மிதமாக பயன்படுத்த வேண்டுமென எச்சரிப்பவர்களும் உண்டு. இவற்றையெல்லாம் விட ஆன்மீக ரீதியாக நெய்விளக்கு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது அதன் காரணம் என்ன?

நெய் விளக்கு ஏற்றுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதற்கு பின்னிருக்கும் தத்துவத்தை விளக்க ஒரு ஆன்மீக கதை சொல்லப்படுவதுண்டு. ஒரு சீடர் தன் குருவிடம், குருவே இந்த உடல் அழிந்து போகக்கூடியது எனில் இதனுள் இருக்கும் ஆன்மாவும் அழிந்து விடுமா என்று கேட்டார்? அதற்கு இவ்வாறு குரு விளக்கி கூறினார், பால் மிகவும் பயனுள்ள ஒரு உணவு பொருள். ஆனால் வெகு விரைவில் கெட்டு விடும். அதுவே அப்பாலில் சிறிதளவு தயிரை கலக்கினால் பால் முழுவதுமாக திரிந்து தயிராக மாறிவிடும்.

அந்த தயிரும் கூட சற்று நேரத்தில் கெட்டு விடும். ஆனால் அந்த தயிரை கடந்தால் அதிலிருந்து கிடைக்கும் வெண்ணெய் எளிதில் கெடாது. எளிதில் கெடாதே அன்றி நாள்பட கெட்டு விடக்கூடிய வெண்ணையை சற்று உருக்கினால். குறிப்பாக முறையாக உருக்கினால் அதிலிருந்து கிடைக்கும் தூய்மையான நெய் கெடுவதில்லை. இப்போது விளங்குகிறதா? கெடக்கூடிய பொருளான பாலினுள், கெட்டுவிடாத தூய்மையா நெய் இருக்கின்றது. அது முறைப்படியான படிநிலைகளினால் அந்த நிலையை எட்டுகிறது.

அதை போலவே அழிந்து விடக்கூடிய உடலினுள் அழிவில்லாத ஆன்மா இருக்கிறது. அதை உணர வேண்டுமென்றால் முறையான பயிற்சிகள், தியானம் ஆன்மீக சாதனா போன்றவற்றை செய்தல் அவசியம் என்றார். இந்த தார்பரியத்தை உணர்த்தும் விதமாகவும் நெய் என்கிற தூய்மையான பொருள் விளக்கு ஏற்றுதல் துவங்கி ஆன்மீகம் மற்றும் வழிபாடு சார்ந்த பல படிநிலைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

ஒரு சில பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்களுக்கு கூட நெய் தீபங்களை ஜோதிடர்கள் பரிந்துரைப்பது உண்டு. தூய்மையான நெய்யினை போல நமக்குள் இருக்கும் தீவினைகளை உருக்கி நம்மை ஒளிரச்செய்வதன் மூலம் இறைவனை அடையலாம்.  

Similar News