"நாவலர் மேல் திடீர் பாசமா?" தி.மு.க. வை நக்கலடித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி @SPVelumanicbe #DMK #Navalar

"நாவலர் மேல் திடீர் பாசமா?" தி.மு.க. வை நக்கலடித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி @SPVelumanicbe #DMK #Navalar

Update: 2020-07-11 13:36 GMT

இன்று வரலாற்றில் முதன் முறையாக நாவலர் நெடுச்சேழியன் படத்திற்க்கு அறிவாலயத்தில் பூ தூவி மரியாதை செலுத்தியது மிகுந்த விவாத பொருளாக மாறியுள்ளது.

மறைந்த நாவலர் நெடுஞ்சேழியன் அவர்கள் திமுக'வின் பொதுச்செயலாளராக அண்ணா'வால் நியமிக்கபட்டு திமுக'வின் அச்சாணியாக விளங்கினார். பின்னாளில் கட்சியில் கருணாநிதி'யின் ஊழல் போக்குகள், மறைமுக தாக்குதல்கள், குழிபறிக்கும் வேலைகளை பொறுக்க முடியாமல் எம.ஜி.ஆர் அவர்களுடன் திமுக'வை விட்டு வெளியேறி அதிமுக'வை தொடங்கி இறுதிவரை அதிமுக'வின் தூணாக இருந்தார். திராவிட கட்சிகளின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது அத்துப்படி.

இதனை விமர்சித்துள்ள அமைச்சர் S.P.வேலுமணி, தனது ட்விட்டர் பதிவில் காட்டமாக விமர்சித்துள்ளார். அதில்,

"நாவலருக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுத்திருந்தால் அவர் உங்கள் கட்சியை விட்டு விலகியிருப்பாரா? @mkstalin

இன்றுவரை அவரை மறந்திருந்த நீங்கள் மாண்புமிகு @CMOTamilNadu அவர்கள், நாவலருக்கு தமிழக அரசால் வெண்கலச்சிலை நிறுவப்படும் என்றவுடன் திடீரென பாசமழையை பொழிவது வேடிக்கையாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

காலை முதல் அனைத்து தரப்பினரும் இதை விமர்சித்து வருவதால் வேறு விஷயத்தை கிளப்பி இதை மறக்கடிக்க என்ன செய்யலாம் என யோசனையில் அறிவாலயம் மூழ்கியுள்ளதாக தகவல்.

Similar News