"விபூதி "உருவான ஆச்சர்யமூட்டும் கதை. திருநீறு அணிவதால் என்ன பயன்?
"விபூதி "உருவான ஆச்சர்யமூட்டும் கதை. திருநீறு அணிவதால் என்ன பயன்?
விபூதி என்பதற்கு "பெருமை" "உயர்வு" என்று பொருள் . இந்துக்கள் பல வினோதமான வழிபாடு முறைகளை பின்பற்றி வருகின்றனர், அது தோற்றுவிக்கப்பட்ட காரணம் அர்த்தமுள்ளதாக இருந்தாலும் பலர் அதன் அர்த்தமோ தேவையோ தெரியாமல் அதை பயன்படுத்தி வருகின்றனர், அப்படி நாம் பின்பற்றும் பல பழக்கவழக்கங்களில் நெற்றியில் விபூதி பூசிக்கொள்வதும் ஒன்று.
இந்த விபூதி ஆனது தீய சக்திகளை அழித்து நல்ல சக்திகளை நம் அருகில் சேர்க்கும் தன்மை உடையதாக கருதப்படுகிறது. இந்த விபூதியை உடலின் ஒவ்வொரு பாகத்தில் பூசிக்கொள்வதால் ஒவ்வொரு பயன் கிடைக்கிறது, பெரும்பாலும் அஃன்யா சக்கரம் இருக்கும் நெற்றியில் பூசிக்கொள்வது சிறந்ததாக சொல்கிறார்கள். சிவபெருமான் தன உடல் முழுவதையும் விபூதியால் பூசிக்கொண்டு இருக்கிறார்.
இதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. பிருகு முனிவர் என்பவர் கானகத்தில் பழம் காய்களை மட்டும் உண்டு கடும் தவம் இயற்றி வந்தபோது ஒரு நாள் தனது ஆசிரமத்தில் புல் வெட்டிக்கொண்டிருந்தபோது தவறுதலாக தன கையை வெட்டிக்கொண்டார் வெட்டுப்பட்ட இடத்திலிருந்த ரத்தம் வருவதற்கு பதிலாக ஒரு மென்மையான திரவம் சுரந்து வந்ததை பார்த்து ஆச்சர்யம் அடைந்து தன் தவ வலிமையை நினைத்து பெருமை கொண்டார்.
இதை கண்ட சிவன் முனிவருக்கு படம் கற்பிக்க நினைத்து வயதான மனிதர் தோற்றத்தில் வந்து அவர் மகிழ்ச்சிக்கு காரணம் கேட்டார் அதற்கு முனிவர் தன் தவ வலிமையை சொல்லி என் தவ வலிமையால் வில்வ மரத்தில் இருந்து வருவது போன்ற ஒரு திரவம் தன் உடலில் ரத்தத்திற்கு பதிலாக வருவதாக கூறினார்.
உடனே அந்த வயதான மனிதர் சிரித்துகொண்டே எல்லா மரமும் எறிந்த பிறகு பஸ்பமாக மாறிவிடும் இப்போது என் கையை வெட்டுகிறேன் என்று தன் கையை வெட்டிய போது பஸ்பமாக விபூதியாக கொட்டியது. இதன் அடிப்படியிலேயே விபூதி புனிதமானதாக ஆற்றல் மிகுந்ததாக கருதப்படுகிறது, விபூதி உயிர்களின் உண்மை தன்மையை குறிப்பதாக இது அமைகிறது பயமோ குழப்பமோ வரும்போது சிறிது விபூதியை வாயில் போட்டுகொண்டால் சிறுது நேரத்தில் பயம் போய் விடும். வயிற்று பகுதியில் விபூதியை தடவினால் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும் நெற்றிப்பகுதியில் பூசிக்கொள்வதால் எதிலும் நன்மையையும் வெற்றியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.