' பல்வேறு மொழியும் கலாச்சாரமும் பண்பாடும் கொண்டிருந்தாலும் மக்கள் குடும்பமாக வாழ அடிப்படை காரணம் ராமர்' - கவர்னர் ஆர்.என் ரவி!
பல்வேறு மொழி கலாச்சாரம் பண்பாடு கொண்ட நமது நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்வதற்கு அடிப்படை ராமர் என்று கவர்னர் யார் என்றே கூறினார்
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தை அடுத்து தேரழுந்தூர் கம்பர் பிறந்த ஊராகும். இந்த ஊரில் உள்ள கம்பர் மணிமண்டபத்தில் தஞ்சை கோட்ட ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் 'அயோத்தி ராமனும் தமிழ் கம்பனும் ' என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு மாநில தலைவர் தெய்வ பிரகாஷ் தலைமை தாங்கினார். இணை தலைவர் கண்ணன் வரவேற்றார். தேரழந்தூர் தந்த மகவி என்ற பொருண்மைமையில் எழுத்தாளர் ஆமருவி தேவநாதன் பேசினார்.
தொடர்ந்து 'அயோத்தி ராமனும் தமிழ் கம்பனும்' என்ற தலைப்பில் நாகப்பட்டினம் சின்மயா மிஷன் ஸ்ரீ சுவாமி ராமகிருஷ்ணன் ஆனந்தா பேசினார். நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ரவி கலந்துகொண்டு கம்பரின் பெருமைகளை நிலை நிறுத்த தொடர்ந்து செயலாற்றி பெரும் பல்வேறு நபர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
பாரதம் முழுவதும் ராம மயம் ஒலித்துக் கொண்டிருக்கிறது . ராமனின் அதிதீவிர பக்தரான கம்பன் பிறந்த மண்ணில் நான் பேசுவதை பாக்கியமாக கருதுகிறேன். பழமை வாய்ந்த தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, அகநானூறு அனைத்திலும் ராமரின் புகழ் ஒலித்துக் கொண்டே உள்ளது. தமிழ் இலக்கியங்களை படிக்கும் போது ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. நமது அரசியல் அமைப்பு அடிநாதம் ராமராஜ்ய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாம் ராமராஜத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
கம்பரை பெருமைப்படுத்த ராமராஜ்ஜியம் அவசியமானது. ராமரை தெரிந்து கொள்ளும் வகையில் கம்பராமாயணத்தை முதலில் தமிழில் அழகாக எடுத்துரைத்ததன் மூலம் சாதாரண மனிதன் மனதிலும் ராமர் பற்றிய எண்ணம் சென்றடைந்தது. அதனால் தான் பல்வேறு மொழிகளில் கம்பராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டது. நம் பாரத தேசம் அரசியலமைப்புகளை தாங்கிய நாடு அல்ல .பாரதம் என்பது ஒரே குடும்பம். இங்கு பல்வேறு மொழி கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் கொண்ட மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதற்கு அடிப்படை ராமர்தான். ராமராஜ்யத்தை நோக்கி நம் பாரதம் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் கம்பரின் பெருமையை நிலை நாட்டுவது அவசியம் ஆகிறது. பாரதத்தின் ஆன்மா ஸ்ரீ ராமர். கம்பரின் புகழை உயர்த்தி பிடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI