திருவாரூரில் களைகட்டிய "நெல் திருவிழா" #Thiruvarur
திருவாரூரில் களைகட்டிய "நெல் திருவிழா" #Thiruvarur
திருவாரூரில் நமது நெல்லைக் காப்போம் இயக்கம் சார்பில் 14 ஆவது தேசிய நெல் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. நமது நெல்லைக் காப்போம் இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்தமுறை கோரோனா சூழல் காரணமாக மாவட்டங்கள் தோறும் நெல் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவாரூரில் நெல் திருவிழா தொடங்கியது.
முன்னதாக நாற்று,விதைக்கோட்டைகளுடன் பேரணி நடைபெற்றது. விழாவில் பாரம்பரிய நெல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விழாவை உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த், வேளாண் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.